Header Ads



இதனைவிட கேவலம், என்ன உள்ளது..?

நாங்கள் கொண்டு வந்த அரசாங்கம், நாங்கள் கொண்டுவந்த மாகாணசபை, எங்களால் தான் முதலமைச்சர் வந்தார் என்றெல்லம் கூறுகின்றனர்.ஆனால் வேலை நடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள். இதனைவிட கேவலம் என்ன உள்ளது என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்துள்ளார்.

மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் நேற்று(28) பிற்பகல் மீன்பிடியாளர்கள் மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முதல் கட்டமாக தங்களது பதிவுகளை செய்து செல்லுங்கள் என்று கூறியும் கூட்டம் நிறைவுபெற்றதும் எடுக்கப்படும் தீர்மானத்தை உங்களுக்கு தருகின்றோம். ஊடக நண்பர்களுக்கு சொல்லப்பட்டாலும் கூட அதுவேறு வகையாக திரிவுப்படுத்தப்பட்டு நான் அவர்களை அனுமதிக்கவில்லையென்ற காட்டமான பிரச்சாரத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

அதற்கு நான் அஞ்சுபவன் அல்ல. ஆனால் மாகாணசபையில் இருக்கும் ஒரு சில உறுப்பினர்கள் மாகாணத்திற்குள் இருக்கும் அதிகாரத்தை அவர்களே கேட்டுக்கொள்ளாமல் பேசிக்கொள்ளாமல் மட்டக்களப்புக்கு வந்து செய்திகொடுப்பதற்காக செய்தியாளர்களிடம் பேசுகின்றனர்.

மக்களை ஏமாற்றவேண்டும் என்று பேசுகின்றனர்.இதனை தவிர்த்துக் கொள்வதற்காகத்தான் ஊடக நண்பர்களை இதிலிருந்து சற்று விலகி ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

பிரதேச செயலாளர் மட்டத்தில் அதிகாரிகள் மட்டத்தில் நேரடியாக பேசி மாகாணசபை மட்டத்தில் பேசக்கூடிய பிரச்சினைகளை பேசி தீர்க்காமல் அதற்குரிய பிரச்சினைக்கு தீர்வுக்கொடுக்க தெரியாமல் ஒரு சிலர் வாய்க்கும் தலைக்கும் சம்பந்தம் இல்லாமல்பேசுகின்றனர். கவலையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

இந்த நிலை மாறவேண்டுமானால் ஊடகத்துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியமாகவுள்ளது.அந்த பங்களிப்பு இருக்கும்போதே அவர்கள் சற்று அமைதியாக பேசும் விடயத்தினை எதிர்பார்க்கமுடியும்.

அதுமட்டுமன்றி ஒரே விடயத்தினையே எல்லோரும் பேசுகின்றனர்.ஒரு மின்கம்பம் வீழ்ந்து விட்டால் எல்லா மாகாணசபை உறுப்பினர்களும் எழுந்து அது தொடர்பில் பேசுகின்றனர். நானும் பேசினேன் என்று ஊடகத்தில் வரவேண்டும் என்பதற்காக பேசுகின்றனர். இது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கும் செயலாக கடந்த காலத்தில் கண்டுகொண்டுள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செயற்பாடுகளை நேர்மையோடும் தன்னம்பிக்கையோடும் கொண்டுசெல்ல வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நியாயமான முறையில் நேர்மையான முறையில் மக்களை ஏமாற்றாத முறையில் மக்களுக்கு போலியான பிரச்சாரங்கள் இல்லாத முறையில் அரசியலையும் அதிகாரிகளின் வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படவேண்டும்.

நாங்கள் விரும்பும் காரணத்தினால் ஊடகவியலாளர்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருங்கள் என்று அவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இந்த மாவட்டத்தில் எத்தனை அபிவிருத்தி திட்டங்கள் தவறிப்போயுள்ளது என்பது பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது தொடர்பில் பேசுவதும் கிடையாது.

அதனால் இந்த மாவட்டத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் பேசுவது கிடையாது. வெறுமனே மக்களுக்கு சூடேற்றி முறுக்கேற்றும் வசனங்களைப்பேசி வீர வசனங்களை பேசும் விடயங்களை கடந்த காலத்தில்செய்தார்கள். தற்போது ஒரு விடயமும் இல்லையென்ற காரணத்தினால் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக சிலவேளைகளில் துவேசத்தினையும் அவர்கள் பேசுகின்றனர்.

வேலை நடக்கவில்லையென்று மாவட்ட அபிவிருத்திக்குழுவில் வந்து ஒப்பாரி வைக்கின்றார்கள். இதனைவிட கேவலம் என்ன உள்ளது என்று இவ்வாறு பேசும் மாகாணசபை உறுப்பினர்களிடம் நான் கேள்வியாக கேட்டேன் என்றால் அவர்கள் முகத்தில் வெள்ளைத்துணியை போட்டுக்கொண்டுசெல்லும் நிலையேற்படும்.

மேலும் அவர்கள் கொண்டுவந்த தேசிய அரசாங்கம், அவர்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் அமைச்சர்களும் மூலமாக செய்யவேண்டிய வேலைகளை மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு கொண்டுவந்து பேசி ஊடகவியலாளர்கள் ஊடாக மாவட்டத்தில் உள்ள மக்களை ஏமாற்றும் செயற்றிட்டமாகவே நான் பார்க்கின்றேன் என்பதை தெளிவாக கூறுகின்றேன் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.