இனவாத - மதவாதத்தை தூண்டிய தரப்பினர், மீளவும் ஒருங்கிணையத் தொடங்கியுள்ளனர்
நாட்டில் மீண்டுமொரு யுத்தத்திற்கு வழிகோலும் மதக் குழுக்கள் எம்மிடையே இருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது எம் இனத்தின் துரதிஸ்டம் எனவும் அவர் கூறியுள்ளார். கிராமத்து விகாரையே கிராமத்தின் சக்தி எனும் வேலைதிட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
யுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்படும் மத அமைப்புக்கள் எங்கள் மத்தியில் இருக்கின்றது. இது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
புதிய அரசியல் அமைப்பு குறித்து போதிய தெளிவு இல்லாதவர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரங்கள் மீளவும் நாட்டில் யுத்தத்திற்கு வழியமைக்கும் வகையில் அமைந்துள்ளது.
எவ்வாறாயினும், இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டிய தரப்பினர் மீளவும் ஒருங்கிணையத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த இனவாத சக்திகள் இடையே பௌத்தர்களைப் போன்றே ஏனைய மதத்தவர்களும் இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிராமத்து விகாரையே கிராமத்தின் சக்தி எனும்இவ்வேலைத்திட்டம் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை சிங்கள மக்களிடையே கொண்டுசெல்வதற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கக்கூடியது.
ReplyDeleteஇந்தவகையில் ரணதுங்க அவர்கள் ஒரு பன்முக ஆளுமை என்பதை மீண்டுமொருமுறை நிருபித்துள்ளார்கள். எமது பாராட்டுக்கள்.