பாராளுமன்றத்தில் ஆத்திரமடைந்த பொன்சேக்கா
யுத்தத்தில் கலந்து கொண்ட காரணத்தினால் தவறு செய்வதற்கு இராணுவ வீரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இன்றைய தினம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,
இப்போதைய நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிக முக்கியமாகும். இந்த நிலையில் பொய்களை பரப்பி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த எவரும் முன்வர வேண்டாம்.
அரசு இராணுவ வீரர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என அவதூறாக எவரும் தெரிவிக்க வேண்டாம்.
மேலும் யுத்தத்தில் பங்கு பற்றியவர்கள் என்ற ஓர் காரணத்திற்காக அவர்களுக்கு தவறு செய்ய இடம் கொடுக்கப்படாது அனைவருக்கும் ஒரே நீதியே.
நாட்டில் இராணுவத்தினரைப்பற்றியும், புலனாய்வுத்துறையைப் பற்றியும் சரியாக தெரிந்து கொள்ளாமல் எவருக்கும் கருத்து தெரிவிக்க எந்த விதமான உரிமையும் இல்லை எனவும் பொன்சேகா தெரிவித்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது உரையினை குழப்ப முயன்று கோஷங்களை எழுப்பியதோடு, பொன்சேகா நேரத்தை வீணடிக்கின்றார் எனவும் கூச்சலிட்டனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பொன்சேகா,
முட்டாள்களை வெளியே விரட்டுங்கள், இவ்வாறான பைத்தியக்காரர்களுக்கு ஒலி வாங்கிகளைக் கொடுக்காதீர்கள்.
நான் இங்கு பேசுவது முக்கியமான விடயமே கேட்டுக்கொண்டிருக்க முடியாதவர்கள் வெளியே சென்று அமர்ந்து இருங்கள். இவர்களை வெளியே தள்ளி கதவை அடையுங்கள்.
இராணுவ வீரர்களுக்கு யுத்த காலத்தில் தண்ணீர் கூட கொடுக்காதவர்கள் இராணுவத்தினரைப் பாதுகாக்க கூச்சல் போடுகின்றார்கள்.
உதய கம்மன்பில யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் எதிர்காலத்தில் யுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என கருத்து தெரிவித்தார்.
அவருக்கு ஒன்றை கூறுகின்றேன் பொலிஸாரிடம் மோதும் அளவிற்கு இலங்கை இராணுவம் ஒன்றும் பலவீனமானது அல்ல.
அப்படியே யுத்தம் ஏற்பட்டால் இராணுவம் 24 மணிநேரத்திற்கு முன்னரே வெற்றி பெற்று விடும் எனவும் பொன்சேகா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னிக்கவும் கௌரவ இராணுவ அதிகாரி பொன்சேகா அவர்களே தற்போது நமது பார்லிமெண்டில் இருக்கும் அதிகமான உருப்பினர்கள் அவர்களின் சிறுவயது வாழிப வயதை அதிகமாக வித்தைகாரர்களுக்கு முன்னால் கழித்துள்ளார்கள் அதனால் அவர்களை அறியாமலே வித்தைகள் காணும்போது வந்த சத்தங்களும் கோசங்களும் அவர்களிடமிருந்து தற்போதும் வெளியகின்றன மேலும் இவர்கள் மாலை 6 மணிக்குபின்பு மது உலகத்தில் வாழ்வதால் சிந்தனை திறன் அற்வர்களாக இருக்கின்றார்கள்.
ReplyDeleteதயவு செய்து இனியாவது தேர்தலில் ஆட்களை தேர்ந்து எடுக்கும் போது,பிற்காலத்தில் நாட்டுக்கும்,மக்களுக்கு பிரயோசனமானவர்களை தேர்ந்து எடுங்கல் இல்லாவிட்டால் நாட்டை குழப்பத்தில் ஆக்கிவிடுவார்கள்.பாராளமன்றம் என்பது நாட்டின் ஓர் முது எலும்பு ,அதில் உள்ளவர்கள் நல்லமுறையில் இருந்தால் நாடும் நாட்டில் இருப்பவர்கள் ,இருக்கப்போகின்றவர்கள் நல்லதாக அமையும்.
ReplyDeleteதயவு செய்து இனியாவது தேர்தலில் ஆட்களை தேர்ந்து எடுக்கும் போது,பிற்காலத்தில் நாட்டுக்கும்,மக்களுக்கு பிரயோசனமானவர்களை தேர்ந்து எடுங்கல் இல்லாவிட்டால் நாட்டை குழப்பத்தில் ஆக்கிவிடுவார்கள்.பாராளமன்றம் என்பது நாட்டின் ஓர் முது எலும்பு ,அதில் உள்ளவர்கள் நல்லமுறையில் இருந்தால் நாடும் நாட்டில் இருப்பவர்கள் ,இருக்கப்போகின்றவர்கள் நல்லதாக அமையும்.
ReplyDelete