கட்டாரில் வீடுபுகுந்து திருடிய இலங்கையர்கள், நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கட்டார் நாட்டவரின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் புகுந்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட 5 இலங்கையர்களுக்கு தோஹா - கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
குற்றவாளிகள் வீட்டுக்குள் புகுந்து 2.2 மில்லியன் கட்டார் ரியால் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
அனுமதியின்றி வீடொன்றுக்குள் புகுந்தமை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை காலம் முடிந்ததும் அவர்களை நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
டோஹாவில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் இரவில் வீட்டில் இல்லாத நேரத்தில் இவர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக இலங்கையர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
Post a Comment