அந்த ஓர், அபயக் குரல்
ஆட்சியாளர் கலீஃபா வலீத் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம். அவர் ஒரு இஸ்லாமியர். இலங்கை, இந்தியா மற்றும் அரபுலகங்களுக்கிடையே கடல் வணிக போக்குவரத்துகள் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். சிந்துப் பகுதியை ராஜா தாஹிர் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். சிந்துப் பகுதி வட இந்தியா மற்றும் இன்றைய பாகிஸ்தானும் சேர்ந்த பகுதி.அந்தப் பகுதிகள் வழியாக செல்லும் கப்பல்களை மெட் இனத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் கொள்ளளையடிக்கும் செல்வங்கள் ராஜா தாஹிருக்கும் பகிரப் பட்டதால் ராஜா தாஹிரின் மறைமுக ஆசி இக்கடல் கொள்ளையர்களுக்குண்டு.கி.பி. 710 இலங்கையிலிருந்து மலையாளக் கரையை தொட்டுவிட்டு சென்று கொண்டிருந்தது ஒரு வணிக கப்பல், அதில் பயணிகளில் பலர் ஹஜ் என்னும் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள்.
சிந்துப் பகுதி அருகே தேபல் (இன்றைய கராச்சி) என்ற இடத்தில் வரும்போது அக்கப்பலை வழிமறைத்தனர் கடல் கொள்ளையர்கள். எதிர்த்தவர்களை வீழ்த்திய பின் பயணிகளை கைதிகளாகவும் அவர்களின் உடைமைகளை மற்றும் வணிகப் பொருட்களை கொள்ளைப் பொருளாகவும் எடுத்துச் சென்றனர் கொள்ளையர்கள்.
இறைவனின் இல்லத்தை நோக்கிய தங்களது பயணம் அநியாக்காரர்களின் சிறையில்லத்திற்கு செல்லும்படி ஆகிவிட்டதே, இனி என்ன நேருமோ என்ற திகிலுடனும், கண்ணிருடனும் இழுத்துச் செல்லப்பட்ட அக்கூட்டத்தில் ஓர் இளம்பெண் எழுப்பிய குரல் “ஓ ஹஜ்ஜாஜ், ஓ ஹஜ்ஜாஜ்…”
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃஃப் அப்போது ஈராக்கின் கவர்னராக கலீஃபா அப்துல் மலிக் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த செய்தி உயிர் தப்பிய சிலரின் மூலம் பக்தாதில் இருந்த ஹஜ்ஜாப் இப்னு யூசுஃபை எட்டுகிறது.
இதற்கு முன்னரும் பல முறை முஸ்லீம்களின் கப்பல்கள் கொள்ளையடிக்கப்பட்ட செய்திகள் ஹஜ்ஜாஜுக்கு வந்து கொண்டுதானிருந்தது, அதனோடு ராஜா தாஹிரின் தொல்லைகளும் எல்லையான முஃரானில் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த அபயக் குரல் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபை உலுக்கிவிட்டது. பின்னர் அப்பெண் ரகசியமாக அனுப்பிய உதவி கோரும் கடிதமொன்றும் ஹஜ்ஜாஜுக்கு வந்து சேர்கிறது.
ராஜா தாஹிருக்கு கடிதமொன்றுடன் தூதனுப்புகிறார். கைதிகளை விடுவிக்குமாறும் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்குமாறும் அதில் குறிப்பிட்டிருந்தார். ராஜா தாஹிர் மறுத்துவிடுகிறார், கொள்ளையர்கள் தனது கட்டுப்பாட்டில் இல்லையென்றும் அதில் தானேதும் செய்யமுடியாதென்றும் மேலும் கொள்ளையர்கள் இஸ்லாமிய எல்லைக்குட்பட்ட முஃரானைச் சேர்ந்தவர்களென்றும் ஆகவே அந்தப் பகுதியை தன்னிடம் ஒப்படைக்குமாறும் துணிச்சலுடன் பதிலளிக்கிறார்.
இந்த ஏழைச் சகோதரியின் அபயக் குரல் ஹஜ்ஜாஜின் தூக்கத்தை தடுக்கிறது. நிம்மதியின்றி தவித்த ஹஜ்ஜாஜ் தனது தூது முயற்சி தோல்வி அடையவே கலீஃபாவின் அனுமதியுடன் படை ஒன்றை தயார் செய்து சிந்தை நோக்கி அனுப்புகிறார். உபைதுல்லாஹ் என்பவரின் தலைமையில் அனுப்பபட்ட முதல் படை படுதோல்வியை சந்திக்கின்றது. அயராமல் மீண்டும் ஒரு படையைத் திரட்டி புதைல் என்பவரின் தலைமையில் அனுப்புகிறார். அதுவும் தோல்வியைச் சந்திக்கின்றது. ஒரு பெண்ணின் அபயக் குரலால் இரண்டு பேரிழப்புகள்.ஆனாலும் அந்த அபயக் குரல் இன்னும் ஹஜ்ஜாஜின் காதுகளில்…..
மூன்றாவது முறையாக ஒரு படையை அனுப்ப திட்டமிடுகிறார். கலீஃபா வலீத் உடன்படவில்லை. ஏனெனில் இதே நேரத்தில் தான் கலீஃபா வலீதின் படைகள் கிழக்கே ரஷ்ய துருக்கிஸ்தானை வென்ற பின் கிப்தியா இப்னு முஸ்லிமா தலைமையில் சீனாவை நோக்சிச் சென்று கொண்டிருந்தது. மேற்கே ஆப்பிரிக்காவை வென்ற படை ஆளுநர் மூஸா இப்னு நுசைர் ஆலோசனையின்படி தளபதி தாரிக் தலைமையில் ஸ்பெயினில் இறங்கியிருந்தது.
இரண்டு பேரிழப்புகளுக்குப் பின் மூன்றாவது முறையாக புதிதாக ஒரு படையை சிந்துவை நோக்கி அனுப்ப எந்தவித சாத்தியமுமில்லை. அரசாங்க கஜானா மீண்டும் ஒரு படையெடுப்பிற்கான செலவுகளை சந்திக்கும் நிலையிலில்லை என்கிறார் கலீஃபா. ஹஜ்ஜாஜ் வற்புறுத்துகிறார். படையெடுப்பிற்கு அனுமதியளித்தால் கஜானாவை செல்வத்தால் நிரப்பிவிடுவேன் என உறுதியளிக்கிறார். ஹஜ்ஜாஜின் வற்புறுத்தல்கள் தொடரவே கலீஃபா வலீத் இறுதியில் சம்மதிக்கிறார்.
இரண்டுமுறை அடிபட்டுவிட்டதால் மிக எச்சரிக்கையாக இம்முறை செயல் படுகிறார் ஹஜ்ஜாஜ். படையைத் திறமையாக வழிநடத்தி வெற்றிமுகம் காண பொருத்தமான நபராக 18 வயதே நிரம்பிய முகம்மது பின் காஸிமை தேர்ந்தெடுக்கிறார். அனுபவங்கள் நிறைந்த பல படைத்தலைவர்கள் இருக்கும் போது இந்த இளஞரை தலைவராக தேர்ந்தெடுத்தது பலரின் முகத்தில் வியப்பினை விளைத்திருக்கலாம், ஆனால் முகம்மது பின் காஸிமைப் பற்றித் தெரிந்தவர்களுக்கோ அது சரியான தேர்வு.
6000 வீரர்களோடு முகம்மது பின் காஸிமின் படை புறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் மேலும் சில உதவி ஏற்பாடுகளையும் செய்ததோடு, கோட்டைச் சுவர்களை தகர்க்கக்கூடிய “மஞ்சனீக்” என்னும் பாறாங் கற்களை அதிக தூரத்திற்கு மிக வேகத்துடன் எறியக் கூடைய இயந்திரங்களையும் கடல் மார்க்கமாக படைக்கு உதவியாக ஹஜ்ஜாஜ் அனுப்புகிறார்.
முகம்மது பின் காஸிமின் தலைமையில் படை எதிரிகளை வீழ்த்தி தேபலை கைப்பற்றுகிறது. முஸ்லீம்களின் யாவரும் சமம் என்ற போக்கும், நன்னடத்தையும் சிந்து மக்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தருகிறது. இதனுடன் மன்னர் தாஹிரின் மீதுள்ள வெறுப்பும் சேர மக்கள் முகம்மது பின் காஸிமின் நடவடிக்கைகளுக்கு சாதகாமாக மாறுகின்றனர். சில நகரங்கள் எதிர்ப்பின்றியே சரணடைகின்றன.
அடுத்தடுத்து நிருன் (இன்றைய பாகிஸ்தானின் ஹைதராபாத்), ஸெஹ்வான், சிசாம் என ஓவ்வொரு நகரமாக வீழ்த்தப்படுகின்றன. இறுதில் ரவர் என்ற இடத்தில் கடுமையான போரில் ராஜ தாஹிரை வீழ்த்தி சிறைப் படுத்தப்பட்ட மக்களை விடுவிக்கிறார் முகம்மது பின் காஸிம். சிந்துவில் அமைதியும் நீதியும் நிலைநாட்டப் படுகிறது,என்னே ஒரு காலம்! ஒரு அபயக் குரலுக்காக பல உயிர்கள் பலியிடப்பட்டாலும் தளராமல் குரலுக்கு பதிலளித்தது அன்றைய ஆட்சியாளர்களின் நிலை.
இன்று எத்தனை அபயக் குரல்கள். ஆட்சியாளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்றது ஆனால் எண்ணமோ அதள பாதாளத்தில் இருக்கிறது.தனது பதவிக்காக சொந்த மக்களையே கொலை செய்யும் ஆட்சியாளர்களை காணும் யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
யாருக்கோ எங்கேயோ நிகழ்கிறது என்ற எண்ணத்தினை கைவிட்டு நம்மால் இயன்றவரை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களின் பாதிப்பினை நீக்கிட முன்வர வேண்டும். கொடுமை இழைப்பவர்களை விட கொடியவர்கள் அந்தக் கொடுமையைக் கண்டு மௌனமாக இருப்பவர்கள்.
ariwoam islamiya waralaarai nalla oru news ..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎல்லோரும் சிந்திக்க வேண்டிய விஷயம் ஒரு நாள் இந்த அபயக் குரல் எமது நாட்டிலும் கேட்க கூடும் அந்த நேரத்தில் அரசியல் வாதிகளை நம்பி இருக்கும் சமூகமாக நாம் இருந்தோம் என்றால் ?
ReplyDeleteஇளைய சமுதாயம் சூழ் நிலை அறிந்து அனைத்து முஸ்லீம் பிரதேச சமூகங்களுடன் நட்புடன் இருப்பது காலத்தின் தேவை ( வெள்ளம் வரும் முன் அணை கட்டவேண்டும் )
முஹ ம்மது பின் காஸிம் ஒரு தலை சிறந்த மாவீரன் (சிந்து நதி கரையினிலே) என்ற நூலை வாசிப்பதின் மூலம் அறிந்து கொள்ளலாம்
ReplyDelete