குர்ஆனை தெருக்களில் விமர்சிக்காதீர்கள் - மைத்திரி + ஞானசார முன் றிஸ்வி முப்தி துணிகரம்
புனித குர்ஆன் கருணையையும் அன்பையுமே போதிக்கிறது. ஏனைய மதங்களை நேசிக்கும் படியே கூறியுள்ளது. இஸ்லாம் சம்பந்தமான விடயங்களை, குர்ஆனை தெருக்களில் விமர்சிக்காதீர்கள். விளக்கங்கள் தேவையென்றால் எம்மிடம் கேளுங்கள்.
பிரச்சினைகளைக் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள முன்வாருங்கள். இது எமது தாய்நாடு. நாம் நாட்டு பற்றுள்ளவர்கள், சமாதானத்தை விரும்புபவர்கள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி பௌத்த மதத் தலைவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்கள் மற்றும் மத விவகார அமைச்சர்கள், கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலே உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி இவ்வாறான வேண்டுகோளை விடுத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
முஸ்லிம்கள் நாம் அமைதியை விரும்புபவர்கள். புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள். எங்கள் மீது நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் என்றால் சந்தேகங்களுக்கான தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வீணாக குர்ஆனையும் முஸ்லிம்களையும் எமது கலாசாரங்களையும் விமர்சித்து அவமதித்துக் கொண்டிருந்தால் நாட்டில் நல்லிணக்கம் உருவாக மாட்டாது.
முஸ்லிம்கள் நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள். நாம் தீவிரவாதிகளல்ல. தீவிரவாத இயக்கமான ஐ.எஸ் அமைப்புடன் எம்மை தொடர்புபடுத்தி குற்றம் சுமத்தப்படுகின்றது. இலங்கையில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்தது உலமா சபையே இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. மனிதபடுகொலையை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.
2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஐ..எஸ். அமைப்பைக் கண்டித்து என்னால் உரையாற்றப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. ஐ..எஸ் அமைப்பு இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாக செயற்படுகின்ற அமைப்பு என நாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். என்றாலும் ஐ..எஸ். உடன் தொடர்ந்தும் எம்மை சம்பந்தப்படுத்துகிறார்கள்.
எமக்கிடையே பிரச்சினைகள் இருந்தால் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். சிங்களவர்கள் முஸ்லிம்களைப் பற்றி புகழ்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளமையை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். கருணாரத்ன ஹேரத் முஸ்லிம் நீதிய (முஸ்லிம் சட்டம்) என்று புத்தகம் ஒன்று எழுதியுள்ளார் ஐ.எஸ் தீவிரவாதத்தை நாம் ஆதரிக்கவில்லை. இலங்கையரில் ஐ..எஸ் தீவிரவாதிகள் இருந்தால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துங்கள்.
ஷரீஆ சட்டம் ஒரு தீவிரவாத சட்டமல்ல. அது அல்லாஹ்வின் சட்டம் ஷரீஆ தெளிவுகளை நாம் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கின்றோம். நாமனைவரும் வேறுபாடுகளை மறந்து இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபடவேண்டும். நல்லிணக்கத்தின் பங்காளர்களாக மாறவேண்டும். என்றார்.
-ARA.Fareel-
நிதானப் போக்கும் நிறைய விளக்கங்களும், ஒரு தலைமைத்துவத்தின் அழகிய முன்மாதிரி.
ReplyDeleteமாஷா அல்லாஹ் நல்ல ஆழமான கருத்து இந்தக்கருத்தால் அவர்களின் உள்ளம்ஈர்க்கப்பட்டு இருக்கும்.
ReplyDeleteMasaallah
ReplyDeleteMay Allah Bless our Brother for his courage in speaking the truth face to face in meetings like these.
ReplyDeleteMay Allah bless you with more courage to take this problem at political level. You and We only fear Allah and Behave respecting others.
பேச வேண்டிய இடத்தில் உண்மையை பேசுபவன்தான் மனிதன்.பேசுவதை கேட்டுகொண்டிருப்பவன் ஜடம்.
ReplyDeleteMasha Allah.
ReplyDeleteYaallah give them more more wisdom to our ACJU and other society to explain that our Qur'an and hadheeth to our monk.
its speech of a religious loving person (Mufthi) look at the word he used, this should clear the misunderstanding of non muslims gentlemen's who set on the table. learn from him this is the way Islam teaching us to speak. Great Sir Head of Jamiyathul Ulema
ReplyDeleteJaffna Muslim, just defending ACJU. according to the report from Colombo Today, ACJU reps could not defend against the allegations from Gnasara Thero. Same Ulamas left a blunder couple of years back when they participated in a Sinhala Talk Show - That instance, he told Muslims are ready to break law pertaining to Nikab in France.
ReplyDeleteIf you have any doubts pls go through this link.
http://www.colombotoday.com/236598-85215/
Rizvie Mufthi😘😍
ReplyDeleteMASHAALLAH
ReplyDeleteMasha Allah. Very good explanation.
ReplyDeleteI suggest the ACJU must answer all the misconceptions of the Buddhists and publish a speech and a book. Like zakir nail published "20 non Muslims common misconceptions" the ACJU and relevant bodies must compile a book answering all the common questions that the Buddhists and the extremist groups have. Ex....y women cover? Islam's views on ISIS and terrorism.....what Islam says about Co existence??? The Qurans views on terrorism. ....what is sharia law??? Etc..
pls go ahead with doing this..may Allah guide us all
Brother.
DeleteAlready ACJU has released books in these topics. In Sinhala language. Very Useful.
Ma Sha Allah
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMouth,teeth,tongue and wind are not enough to speak !
ReplyDeleteEspecially to speak in public you need more that that.
Anybody can easily and without a moment's thinking
can utter words like " masha Allah,Insha Allah and
Jazakalla khair and get them published on forums
like Jaffna Muslim. But to speak the truth needs
knowledge , experience and courage above all .
SPEAKING THE TRUTH LOUDLY IS VERY EXPENSIVE
PRACTICE AND MANY OR MOST WANT TO BE SILENT IN
FRONT OF THE TRUTH.
May Allah bless you for the courage to speak the truth, No muslim in Sri Lanka support terrorism or extremism.Let us hope and pray to almighty to change the minds of those who are pointing an accusing towards the Ummah and stop them them condemning and rediculing our beloved holy Prophet(PBUM) and the almighty Allah
ReplyDelete