Header Ads



ஜனாதிபதிக்கு ஞானசாராவின் நற்சான்றிதழ் , தன்னை கைது செய்யும்படியும் கோரிக்கை

நாட்டில் சக­வாழ்வும் நல்­லி­ணக்­கமும் தேசிய ஒரு­மைப்­பாடும் உரு­வா­கு­வ­தற்கு என்னைக் கைது செய்ய வேண்­டு­மென்றால் கைது செய்­யுங்கள்.

நாட்டின் நன்­மைக்­காக, இன நல்­லி­ணக்­கத்­துக்­காக நான் சிறைக்குச் செல்லத் தயா­ராக இருக்­கிறேன் என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

முஸ்லிம் அமைச்­சர்­களும். எம்.பி. க்களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைச் சந்­தித்து ஞான­சார தேரரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்;

நான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னவன். குழப்­பங்­க­ளுக்கு கார­ண­மானவன் என்று முஸ்லிம் அமைச்­சர்­களும் எம்.பி. க்களும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறைப்­பாடு செய்­தி­ருக்­கி­றார்கள்.

கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றார்கள். என்னைப் பற்றித் தவ­றாகக் கூறி­யி­ருக்­கி­றார்கள். என்னைக் கைது செய்யும் படியும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.

என்னைக் கைது செய்­வதன் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­யு­மென்றால் அதற்கு நான் தயா­ரா­கவே இருக்­கிறேன். சிறை செல்­லவும் தயார் நிலையில் உள்ளேன்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­மதத் தலை­வர்கள் மற்றும் மதங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­சர்­களை அழைத்துப் பேச்­சு­வார்த்தை நடத்­திய போதும் நானும் அதற்கு அழைக்­கப்­பட்­டமை தவ­றா­னது என முஸ்லிம் எம்.பிக்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள். பிரச்­சி­னை­களை கலந்­து­ரையா­டல்கள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.

பிரச்­சி­னைக்­கு­ரி­யவர் அழைக்­கப்­பட்டு அவ­ரு­டனும் கலந்­து­ரை­யா­டப்­பட வேண்டும். இந்த அடிப்­ப­டை­யிலே நான் அங்கு அழைக்­கப்­பட்டேன்.

நான் அங்கு அழைக்­கப்­பட்­ட­மைக்கு முஸ்லிம் எம்.பி. க்கள் குழம்பிப் போய் இருக்­கி­றார்கள். ஏன் அவர்­க­ளுக்கு இடையில் இந்தக் குழப்பம் என்று தெரி­ய­வில்லை.

கலந்­து­ரை­யா­டல்கள் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ள முஸ்­லிம்கள் விரும்­ப­வில்­லையா? ஜனா­தி­பதி நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த சிறந்­ததோர் வாய்ப்பை உரு­வாக்கித் தந்­துள்ளார். இந்த வாய்ப்பை நாம் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

புத்த பெருமான் போதித்த கருணை, அகிம்­சை­யையே நாம் கடைப்­பி­டிக்­கிறோம். நாம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்துக்கும் புரிந்துணர்வுகளே அத்தியாவசியமாகும். ஜனாதிபதி ஏற்படுத்தித் தந்துள்ள சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

ARA.Fareel


6 comments:

  1. வம்பன் ஆகிய உன்னுடன் கலந்துரையாடுவதட்கு என்ன இருக்கிறது???

    ReplyDelete
  2. சூடு காலத்திலும் புலம்புகிறான். குளிர் காலத்திலும் புலம்புகிறான்டா இவன்.

    ReplyDelete
  3. ஞானம்சாரா தேர்ரின் நடவடிக்கைகள் ஆழமாகியுள்ளதையே இது காட்டுகின்றது. இவரை வழிநடாத்துவதில் ஆரம்பத்தில் ஒருசில அரசியல்வாதிகளே திரைமறைவில் இருந்தனர்.
    இவரது போரூக்கத்தன்மையை அதிரடியாக அல்லாது அர்த்தமாகவும் விவேகமாகவும் நகர்த்துவதற்கு வெளிநாட்டு சக்திகள் மட்டுமன்றி உள்நாட்டு மூளைசாலிகளதும் வழிகாட்டல்கள் கிடைத்திருக்க வேண்டும்.
    எனவே நாமும் சிந்தனா ரீதியான செயற்பாடுகளிலேயே காலூன்ற வேண்டுமே தவிர அதிரடி ஆர்ப்பாட்டங்களில் அல்ல. குறிப்பாக சிங்கள மக்களிலுள்ள கற்ற செல்வாக்குள்ளவர்களது மனங்களை வெல்லவேண்டும். பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒவ்வொரு திணைக்களங்களிலுமுள்ள சான்றோர்களை எமக்காகப் பேசக்கூடியவர்களாக மாற்றவேண்டும். சிறு சிறு கிராமங்கள் தொடக்கம் நகர்புறம் வரையிலாக காணப்படும் மக்களுடனும் பன்சலைகளுடனும் உள்ள தொடர்புகளை வலுவூட்டுவது அவசியமாகும்.

    ReplyDelete
  4. அல்லாh இவனுக்கு நேர்வழியைக் காட்டுவானாக

    ReplyDelete

Powered by Blogger.