காலம் தாழ்த்த வேண்டாம் என, கல்வியமைச்சருக்கு உலமா சபை கடிதம்
அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாம் மற்றும் அரபு மொழி போதிக்கும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை காலம் தாழ்த்தாது நிரப்புமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இறுதியாக 2010 ஆம் ஆண்டு மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அப்போது 635 மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நாடளாவிய ரீதியில் நிரப்பப்பட வேண்டியிருந்த நிலையில் 150 நியமனங்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் உலமா சபை கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் கருத்து தெரிவிக்கையில்;
“அரசாங்கப் பாடசாலைகளில் தற்போது 1000 இற்கும் மேற்பட்ட மௌலவியா ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதால் அவ்வாறான பாடசாலைகளில் அரபு மற்றும் இஸ்லாம் மௌலவியா ஆசிரியரல்லாத சாதாரண ஏனைய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களாலேயே படிப்பிக்கப்படுகிறது. இஸ்லாம் மற்றும் அரபு மொழி மௌலவிகளினால் போதிக்கப்படுவதே மாணவர்களுக்கு பயன்தரும். திறமையான சித்திகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
உலமா சபை மௌலவியா ஆசிரியர் நியமனம் தொடர்பான அழுத்தங்களையும் போராட்டங்களையும் 1936 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்தது. இதனையடுத்தே 1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்நிலையில் பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்” என்றார்.
இதேவேளை முஸ்லிம் உலமா கட்சி 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மௌலவி ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொள்ள பல போராட்டங்களை நடத்தியுள்ளதாக கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜெயந்தவிடம் அன்று மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது ஜாதிகஹெல உறுமய இவ்வாறான நியமனம் வழங்குவதை எதிர்ப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து மௌலவி ஆசிரியர் நியமனம் புதியதொன்றல்ல.
வழமையாக வழங்கப்பட்டு வருவதொன்று என்று தெளிவுபடுத்தப்பட்டது. இதனையடுத்தே 2010 ஆம் ஆண்டு 150 மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நியமனம் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்டதாகும்.
-ARA.Fareel-
இது என்ன இறுமாப்பு ? இவனுகளுக்கு ?
ReplyDeleteதமிழில் செய்தி வசித்து இங்கிலீஷில்
பின்னூட்டம்? நம்ம நிசாம் நானா ,
ரஷீத் நானா இப்படி கொஞ்சப் பேர் ....
இவர்களை கருவாக கொண்டு தான்
தமிழில் "குடிப்பது தண்ணீர் கொப்பளிப்பது பன்னீர் " என்ற வார்த்தை உருவானதோ ? இனியாவது
திருந்துவார்கள் என்ற நம்பிக்கையுடன்
வாசகர்கள் சார்பில் .......