'தேசவிரோத செயல்களை செய்து, ஆட்சியை பிடிக்க மஹிந்த சதித்திட்டம்'
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேச விரோத செயல்களை செய்து ஆட்சியை பிடிப்பதற்காக சதித்திட்டங்களை தீட்டி வருவதாக மக்கள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இப்போதைய ஆட்சி 5 வருடங்களுக்கு கவிழ்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. அப்படி இருக்கும் போது அவர் எவ்விதம் ஆட்சியை பிடிக்கப்போகின்றார்.
மஹிந்த ராஜபக்ச அடுத்த வருடம் ஆட்சியை பிடிக்கப்போவதாக கருத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 5 வருடங்களுக்கு அசைக்க முடியாத ஆட்சியை அவர் சதி மூலமாக கவிழ்க்க திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகின்றது.
அதன்படி அரசியல் ராஜதந்திரம் அற்ற ஓர் செயல் உச்ச கட்ட சூழ்ச்சியை முறையை கையாளப்போகின்றாரா..? என்பது தொடர்பில் அரசு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் தினேஷ் குணவர்தன இராணுவ புரட்சி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்சவும் எவ்வகையிலாவது அதிகாரத்தை கைப்பற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இவை நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அரசு மக்களுடன் இணைந்து மக்களுக்கான மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற செயற்படாவிட்டால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.
அதே போன்று மஹிந்த சீனாவுடன் கொண்டுள்ள தொடர்பினாலும், அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் காரணமாகவும் நாடு மீள் எழ முடியாத இக்கட்டினை அடைந்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதின் அதிகாரங்களை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளாரா..? பிரதமர் கோத்தபாய மற்றும் பசில் போன்றோரை போல செயற்பட்டு வருகின்றாரா..? என்ற பெரும் சந்தேகமும் எழுந்துள்ளதாக சமீர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment