ஊழல் அதிகாரிகளை ஹெலிகொப்டரில் இருந்து தள்ளி கொள்வேன் - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோட்ரிகோ நடுவானில் பறந்த போது ஒருவரை தள்ளிவிட்டு தான் கொலை செய்துள்ளதாகவும், ஊழல் அதிகாரிகளை அதேபோல் தள்ளிவிட்டு கொலை செய்வேன் என்று அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் Rodrigo Duterte. வழக்கறிஞரான இவர் தொடர்ந்து 22 ஆண்டுகள் தவாவே நகரின் மேயராக பணியாற்றி வந்துள்ளார். வடகோரிய ஜனாதிபதியான கிம் யோங்கிற்கு பிறகு, மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கும் இவர், போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவருக்கும் எந்த ஒரு மன்னிப்பும் இன்றி மரணதண்டனை நிறைவேற்றி வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் அவர் அதிகாரிகளுக்கு பகீரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் தான் நடுவானில் பறந்த போது ஒருவரை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளதாகவும், அதே போன்று ஊழல் அதிகாரிகளை தள்ளி விட்டு கொலை செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்படியிருந்தால் பல நாடுகள் ஒரு நிலையை அடையும்...
ReplyDelete