Header Ads



''எனது மதிப்பை இழக்க செய்வதற்காக, மற்றுமொரு முயற்சி”

நாடாளுமன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்தை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவில் தூதரக பிரதிநிதி இல்லாத லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் வீடு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் கோத்தபாய ராஜபக்சவின் மகன் தங்க வைக்கப்பட்டுள்ளார் என நேற்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு வருடமும் 9 மாதங்களும் அந்த வீட்டுக்கான நிதி செலுத்தி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வெளிவிவகார அமைச்சு நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மங்கள சமரவீர நேற்று இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்ட கோத்தபாய மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தனது மகன் அரசாங்க பணத்தில் அமெரிக்காவில் வீடு கொள்வனவு செய்து வாழவில்லை. அத்துடன் தனது மகனது பாதுகாப்புக்காக இரண்டு இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் போலியான குற்றச்சாட்டாகும்.

“எனது மகன் அரசாங்க பணத்தில் அமெரிக்காவில் வீடொன்றை கொள்வனவு செய்து வாழ்வதாக வெளிவிவகார அமைச்சரவினால் வெளியிடப்பட்ட அடிப்படைற்ற கருத்துக்களுக்கு எனது கண்டனத்தை வெளியிடுகின்றேன் – எனது மதிப்பை இழக்க செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு முயற்சியாகும்” என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Mr.Gotaba ஏன் உங்களுக்கு இது தொடர்பாக உங்கள் மதிப்பு குறையுது என்று வழக்கு தொடர முடியாது facebook கில் பதிவு இட்டால் அது இது தொடர்பாக உங்களுக்கு தீர்வு கிட்டுமா ? பாராளுமன்றில் கூறியதை பார்த்தல் இது உண்மையாக தான் நோக்க வேண்டும்.

    ReplyDelete
  2. இழப்பதற்கு என்ன இருக்குது.

    ReplyDelete

Powered by Blogger.