ஷெய்குல் ஹதீஸ், மௌலானா அப்துல்ஹக் அல்அஃழமி வபாத்தானார்
- TM முபாரிஸ் ரஷாதி-
முழுப் பெயர் - மௌலானா அப்துல் ஹக் பின் முஹம்மத் உமர் அல் அஃழமி ரஹிமஹுல்லாஹ்.
பிறப்பு - 1928ம் ஆண்டில் வட இந்தியாவின் உத்தரபிரதேஷின் அஸ்ம்கரா மாவட்டத்தின் ஜெஹதீஷ்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார்கள்.
1948ம் ஆண்டு மேற்படிப்புக்காக தாருல் உலூம் தேவ்பந்தில் சேர்ந்து 1952 ம் ஆண்டு முதல் உத்தரப்பிரதேஷின் வரணாசியில் கல்விப்பணியை தொடங்கினார்கள். பின் 1982ம் ஆண்டில் தாருல் உலூம் தேவ்பந்தின் (தௌரா) ஹதீஸ்துறை மேற்படிப்பிற்கான புஹாரி கிரந்தத்தின் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள்.
அல்லாமா மஹ்மூத் ஹஸன் தேவ்பந்தி அவர்களின் மாணவர்களான அல்லாமா ஹுஸைன் அஹ்மத் மதனீ, அல்லாமா இஃஸாஸ் அலி அல் அம்ரோஹி போன்றோரின் சிரேஷ்ட மாணவராகவே மௌலானா அப்துல் ஹக் அல் அஃழமி அவர்கள் கருதப்பட்டார்கள்.
மேலும் அல்லாமா இப்ராஹீம் அல் பல்யாவீ , அல்லாமா ஹபீபுர்ரஹ்மான் அல் அஃழமீ , ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஸகரிய்யா அல் காந்தலவி, அல்லாமா பஹ்ருல் ஹஸன் முராத் ஆபாதி போன்ற மாமேதைகளிடமிருந்தும் கல்வி பயின்றுள்ளார்கள்.
தாருல் உலூம் தேவ்பந்தின் (ஷைகுத் தானி) இரண்டாவது முதல்வர் என்று கௌரவமாக அழைக்கப்பட்ட மௌலானா அவர்கள் 1982ம் ஆண்டு தொடக்கம் கடந்த 34 வருடங்களாக ஸஹீஹுல் புஹாரி கிரந்தத்தையே மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வந்தார்கள்.
நேற்றைய தினம் தனது 88 வது வயதில் (30/12/016) வெள்ளிக் கிழமை மஃரிபுடைய நேரத்தில் வபாத்தானார்கள்.
அல்லாஹ் அன்னாரது சகல பாவங்களையும் மன்னித்து பிர்தௌஸுல் அஃலாவை அவர்களுக்கு வழங்குவானாக.
- நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி, 31/12/2016.
Post a Comment