ஞானசாரரை நாய் கூண்டில் அடைப்போம், என்றவர்கள் எங்கே..?
ஞானசார தேரரின் கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில் அவரை நாய் கூட்டில் அடைப்போம் என்றவர்கள் சாதரண மனிதர்கள் பொலிஸ் நிலையம் ஏறி இறங்குவது போல் ஏறித் திரிகின்றனர்.
இதற்காகதான் மக்கள் வாக்களித்து ஆட்சிபீடமேற்றினர் ஏன் அதிகார தலைவர்களுக்கு உரிய உரிய இடங்களில் பேசி தீர்வு காண முடியாது நாங்கள் மிகத் தெளிவாக இருந்தோம்.இது சர்வதேசத்தின் திட்டமிடலுடன் மிகப் பாரிய சதி செய்து இந்த நாட்டின் முஸ்லீம் களுக்கு எதிரான வித்து என்பதை கூறினோன்
பணத்துக்காகவும் அதிகார கதிரைக்காகவும் ஆசை கொண்ட எம்மவர்கள் சூழ்ச்சிகளில் மூழ்கினர். இன்று எம் சமுகம் எதிர்கொள்ளும் பிரச்சினை க்கு முக்கிய சூத்திரகாரிகள் இவர்கள் தான் வரலாறு நெடுகிலும் சுயநல அரசியலுக்காக காட்டிக் கொடுப்புகள் இவ்வாறு தான் நிகழ்ந்திருக்கிறது என்றார்
இன்று கிழக்கு வாசல் இல்லத்தில் இடம் பெற்ற மருதமுனை இளைஞர்களுடான சந்திப்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் குறிப்பிட்டார் மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்,
இந்த நாட்டின் ஸ்திரமற்ற தண்மை தொடர்பில் அணைவரும் கருத்து கூறுகிறார்கள் முஸ்லிம் மக்களை பகடைக்காய்களாக பாவித்து அரசியல் செய்து பழகி தலைவர்கள் இது ஒரு தேர்தல் காலமென்றால் எவ்வாறு மேடைகளில் முழங்கி இருப்பார்கள் அதுதான் இன்று எமது சமுகத்தின் நிலை
புத்திசாதுர்யமாக சமுகம் எடுக்க வேண்டிய முடிவுகளை சுய நலத்திற்காக மாற்றி அமைக்கின்றவர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள். பொதுபல சேனாவுக்கெதிராக நான் பாரளுமன்றத்தில் ஆற்றிய உரையின் அர்த்தம் எம் தலைவர்கள் என்று சொல்லுபவர்கள் புரிவதற்க்கு பல கால மெடுக்கும் என்றார்.
நீங்களும் மஹிந்தவும் அவரை பாதுகாத்து அவருக்கு இவ்வாரெல்லாம் செய்யவும் என்று அவருடன் ஒப்பந்தம் செய்திருப்பதால் தற்போதய நிலையில் அவரை நாய்கூண்டில் அடைப்பது கஸ்ட்ம் நீங்கள் உங்கள் சகோதரன் மஹிந்த அனைவரும் முடிந்தபின்பு ஞானசார நாய்கூண்டில் அடைக்கப்படுவார்!
ReplyDeleteVery good answer.
ReplyDeleteமரியாதைக்குரிய அமைச்சரே,
ReplyDeleteதாங்கள் முன்னைய அரசாங்கத்தின் மிக முக்கிய பங்கில் இருக்கும் போது உங்களால் ,அன்று நடந்த அலுத்கமை தொடக்கம் அனைத்து பள்ளிவாயல் பிரசினைகளுக்கு கொடுக்க முடிந்த ஒரே பதில் 'சர்வதேச சதி' என்பதை தவிர வேறொன்றும் இல்லை. மேலும் இன்றைய அரசாங்கம் ஒரு படி மேல் தான்,ஏனெனில்
1.அன்று அனைத்து ஊடகங்களும் மகிந்தவின் கட்டுப்பாட்டினால் எவ்வித,அனியாயங்களையும் வெளி இடவில்லை,ஆனால் இன்றைய அரசாங்கம் அரச ஊடகங்களில் கூட இனவாதத்துக்கான எதிரான பிரசாரங்களை மேற்கொள்கின்றன.
2.அன்றைய காலத்தில் உங்கள் போன்ற முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட ஜனாதிபதியோ ,ஏனைய முக்கிய பதவியில் உள்ளவர்களோ வெறும் பேச்சிலாவது எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை,ஆனால் இனறு ஜனாதிபதி,பிரதமர்,பாதுகாப்பு செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அனைவரும் தனது எதிர்பினை வெளி இடுகின்றனர்.
3.அன்று இனவாதிகளுக்கு கட்டுப்படுத்தாது பாதுகாப்பு ஊழியர்கள் அமைதி காத்தனர்,இன்று குறைந்தது இன்று மட்டகளப்புக்கு செல்லாமல் கூட தடுத்திருக்கின்றனர்.
எனவே அன்றைய அரசாங்கத்தை விட இவ்வரசாங்கம் மேலானதே.
அப்படி மேலானது எனில் இவ்வரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை??
அன்று நாட்டை பெரும் கடன் சுமையில் ஆக்கிய Mahinda & Co அணியினருக்கு நாட்டை மீண்டும் கைப்பற்ற வேண்டிய தேவை உள்ளது,இவ்வாறான சந்தர்பத்தில் இந்த இனவாதிகளுக்கு எதிராய் அதிரடி நடவடிக்கை எடுத்தால்,அதன் மூலம் ஆட்சியை குழப்ப இந்த அனைத்து குழுக்களினதும் இயங்குனர் கோத்தா தயாராக இருக்கிறார்,அதற்கு வாய்ப்பளிக்காமல் தடுக்கவே அரசாங்கம் மெதுவான போக்கை கடைப்பிடிக்கின்றது என்பது அனைவர்ம் விளங்க கூடிய விளக்கமாகும்.
எனவே நம் சமூகதுக்காக பிராதியுங்கள்.
நன்றி