மலேசியாவில் இலங்கைத் தூதுவரின் வீட்டில், பழைய ஞாபகங்களை மீட்டிய ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டு நேற்று நாடு திரும்பியிருந்தார்.
எனினும் இந்த விஜயத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள வீடொன்றில் கண்ட புகைப்படத்தின் காரணமாக பழைய நினைவுகளை அவர் புதுபித்துள்ளார்.
மலேசியாவின் இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்ஸாரின் வீட்டில் இந்த பழைய புகைப்படத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுள்ளார்.
அந்த புகைப்படம் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்ராஹிம் அக்காலப்பகுதியில் எகிப்தில் இலங்கை உயர்ஸ்தானிகராக செயற்பட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் 2009ஆம் ஆண்டிலும் இதேமுறையில் ஆடை அணிந்த ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தான் இந்த முறையில் ஆடை அணிந்து தேர்தல் மேடைகளில் ஏறிய சம்பவம் பாரிய சர்ச்சைக்குரிய சம்பவமாகியதெனவும், அது முதல் முறை இடம்பெற்ற ஒன்று அல்ல எனவும் ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment