Header Ads



'யாஅல்லாஹ் என் நாட்டிற்கும், மார்க்கத்திற்கும் பயனுள்ளதாக பட்ஜெட்டை அமைத்திடு'

-மு.மு.மீ-

யா அல்லாஹ் என்னுடைய நாட்டிற்கும், மார்க்கத்திற்கும் பயனுள்ள வகையில் இந்த பட்ஜெட்டை அமைத்திடுவாயாக என்ற துஆவோடு 2017 க்கான பெட்ஜெட்டில் கையெழுத்திட்டார் மன்னர் சல்மான்......!!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மன்னர் சல்மான் அவர்கள் யா அல்லாஹ் என்னுடைய நாட்டிற்கும், மார்க்கத்திற்கும் பயனுள்ள வகையில் இந்த பட்ஜெட்டை அமைத்திடுவாயாக என்று துஆவோடு கையெழுத்திட்டார்.

அந்த பட்ஜெட்டில் 890 சவூதி பில்லியன் ரியால்கள் செலவு கணக்குக்கான பட்ஜெட் வெளியிடப்பட்டது.

இதை ஒன்பது துறைகளாக பிரித்து அதன் பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டது.

கல்விக்கு 200 பில்லியன் ரியால்களும், சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு 120 பில்லியன் ரியால்களும், ராணுவத்திற்கு 190 பில்லியன் ரியால்களும், கட்டமைப்பு மற்றும் போக்குவரத்திற்கு 52 பில்லியன் ரியால்களும், பொதுத்துறை நிர்வாகத்திற்கு 26 பில்லியன் ரியால்களும் மற்றவை இதர பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் 36 சதவீதம் ஒதுக்கியுள்ளது பாராட்டிற்கு உரியது.

ராணுவத்திற்கு 21.3 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு கச்சா எண்ணெய் மூலம் 480 பில்லியன் ரியால்களும், கச்சா எண்ணை சாராத தொழில்கள் மூலம் 212 பில்லியன் ரியால்களும் வருவாயாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் 198 பில்லியன் ரியால்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2016 ஐ காட்டிலும் 46 சதவீதம் அதிக வருவாயை கச்சா எண்ணை மூலமாகக் கிடைக்கும் என அரசு பட்ஜெட் தெரிவிக்கிறது.

ஆனால் அதில் சறுக்கினால் மிகப்பெரிய பாதிப்புகளை தொழில் நடத்துபவர்கள், வெளிநாட்டினர் பணியிழப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் என பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

உலகிலேயே கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து கோடிக்கணக்கான குடும்பங்களின் பசியாற்றும் நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது.

ஏழைகளின் பசியை போக்கும் சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை இறைவன் மென்மேலும் பெருக்க வேண்டும்.

மன்னர் சல்மான் அவர்கள் இறைவனின் பெயர் கூறி துஆவோடு கையெழுத்திட்டது காண்போரின் உள்ளங்களை கவர்ந்துள்ளது.

1 comment:

  1. This man destroyed Islamic worlds economy by giving oil for low price for America and doubled it's production to cover loosing money.so as a result of over supply oil price gone down.Saudi did so to attack the economy of Iran and Russia.But he could not understand that he is attacking Saudi itself and it is suicidal.So now struggling to bridge the gap of revenue and expenditure.To cover the budget he introduce a very inhuman,un-Islamic budget.He wants to rob peter to pay Paul.

    The more he believe in America the more will suffer.But it is Russia that can trust in.Russia recently built the biggest Mosque in Moscow that opened by Mr. Putin and Mr Erdugan too participated. Now Turkey Understand true nature of America and the west, changed his stance on Russia and incline towards Russia.But Saudi is having close relationship with America and Israel who are anti Islamic. So if King Salman have genuine concern for the Islam and Muslim he should forget the Shia-sunni differences and should work for unity of Islamic world.Imam Khomeini warned Arab world that not to trust America but ignored.Now they are suffering.

    ReplyDelete

Powered by Blogger.