அண்டப் புழுகு விக்னேஸ்வரன், முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பாரா..?
-முஹம்மத்-
வடமாகாண முதலமைச்சரின் மீள்குடியேற்றம் சம்பந்தமான அறிக்கை தவறானது. மழை யாழ்ப்பாணத்தில் பெய்ய, முதலமைச்சர் மன்னாரில் நின்று கொண்டு குடை பிடித்துள்ளார்.
மீள்குடியேற்றத் தகவல்கள் மாவட்ட ரீதியாக பார்க்கப் படவேண்டும். மீள்குடியேற்ற விடயத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் மீது மிகப் பெரிய அநீதி அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது.
கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் 2165 பேர் மீள்குடியேற்றத்துக்கு பதிவு செய்துள்ள போதும் 2015 செப்டம்பர் வரை யாருக்கும் அரச வீடமைப்பு அல்லது இந்திய வீடமைப்பு உதவிகளை யாழ் மாவட்ட செயலகமோ அல்லது உதவி அரசாங்க அதிபர் அலுவலகமோ வழங்கவில்லை. கடுமையான அழுத்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னரே 2015 ஆம் ஆண்டு 50 பேருக்கும் 2016 இல் 75 பேருக்கும் வீடமைப்பு உதவிகள் வழங்கப் பட்டு வருகின்றது. 2016 இல் வீட்டு கட்டுமான வேலைகளை ஆரம்பித்த பலருக்கு இன்னும் இறுதிக் கட்ட கொடுப்பனவு வழங்கப் படவில்லை.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தகவல் அடிப்படையில் 2165 குடும்பங்களில் 125 குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவிகளை வழங்கி விட்டு 595 பேரை குடியேற்றி இருப்பதாக முதலமைச்சர் அறிக்கை விட்டிருப்பது தவறான தகவலாகும். அந்த 595 பேரில் காணிகள் இல்லாமல் இருப்போர் 200 பேர்களாகும். அவர்களுக்கு வழங்க வேண்டிய மீள்குடியேற்ற உபகரண நிதி கூட முறையாக வழங்கப் படவில்லை. மீள்குடியேற்ற உபகரண நிதி 25000 ரூபாவில் 5000 ரூபாவை மட்டும் ஒரு சில குடும்பங்களுக்கு வழங்கி விட்டு மிகுதி 20000 ரூபாவும் ஏப்பம் விடப் பட்டுள்ளதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். எனவே 2165 குடும்பங்களுக்கும் வழங்கப் பட வேண்டிய ஏறக் குறைய 50 மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப் பட்டிருக்குமோ என அஞ்சப் படுகின்றது.
அதே போன்று மீள்குடியேறும் குடும்பங்களுக்கு வழங்கப் படும் மீள்குடியேற்ற ஆரம்ப ஏற்பாட்டு நிதியான 100000 ரூபாவும் பெரும் பாலான யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வழங்கப் படவில்லை. இந்த நிதியில் ஏறக் குறைய 200 மில்லிஒன் ரூபாய்க்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
எனவே இவை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் இந்திய உயர் ஸ்தனிகராலய தூதுவர் போன்றோரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப் படவுள்ளது.
மேலும் யாழ்ப்பாண மீள்குடியேற்றத்துக்காக ஐரோப்பிய நாடுகள் மற்றும் நோர்வே போன்றன வழங்கிய உதவிகளிலும் எந்த உதவியும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வழங்கப் படவில்லை.
மேலும் கடந்த 2016 ஆகஸ்ட் மற்றும் அதற்கு பின்னரான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3200 குடும்பங்கள் மீள்குடியேற்றத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் 100 சதவிகிதமானோருக்கு இதுவரை எந்த உதவியும் வழங்கப் படவில்லை. எனவே பழைய தரவுகளின் படி 93 விகிதமானவர்களுக்கு மீள்குடியேற்ற நிதி எதுவும் வழங்கவில்லை. புதிய தரவுகளின் அடிப்படையில் நூறு வீதம் மீள்குடியேற்ற நிதி எதுவும் வழங்கவில்லை. யாழ்ப்பாணத்தில் அரச அல்லது இந்திய வீடமைப்பு உதவி பெற்று குடியேறியோர் 137 குடும்பங்கள் மாத்திரமே.
மேலும் யாழ்ப்பாண முஸ்லிம்களில் 2010 மற்றும் 2011இல் மீள்குடியேற்றத்துக்கு விண்ணப்பித்த 2165 குடும்பங்களில் 1330 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. இது ஏறக் குறைய 61 வீதமாகும். அதே வேளை 2016 பதிவுகளின் படி 2500 பேருக்கு காணிகள் இல்லை. இது ஏறக் குறைய 78 சதவிகிதமாகும். இது இவ்வாறு இருக்கையில் வடமாகாணமுஸ்லிம்களுக்கு 73 சதவிகித காணிகள் வழங்கி விட்டதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
எனவே இலங்கை மக்களை குறிப்பாக வடபகுதி மக்களை ஏமாற்றிய குற்றத்துக்காக வடமாகாண முதலமைச்சர் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் அதேவேளை நீதியாக யாழ்ப்பாண முஸ்லிம்களைக் குடியேற்றவும் யாழ்ப்பாணம் உட்பட ஏனைய பிரதேசங்களில் உள்ள காணி ஒதுக்கீடுகள் மற்றும் காணி அனுமதிப்பத்திரப் பிரச்சினையில் போடப்பட்டுள்ள தடைகளை நீக்க முன்வருமாறும் வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் நாம் வடமாகாண முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றோம்.
Vickneshwaran is the latest no.1 racist!! he tries to motivate terrorism again as during the past. it is very surprise how he became a chief justice who has no single thought of justice of no conscience??
ReplyDeleteI respect justice Vickneswaran to the highest level but sorry to state that Vickneswaran as a politician does not deserve any form of respect duwe to the fact that he is in the habit of suppressing the truth and act in a way that Muslim community in jaffna has been branded as persona non grata. If he is a gentlemen of the highest order should learn to treat all northern people as equal in all aspects. failing which he should honorably resign from position and polics for the betterment of the northern people irespective race ,religion or cast. it is over to you chief minister
ReplyDelete