'முஸ்லிம் ஒருவரால் தமிழருக்கு, விற்கப்பட்ட விகாரை அழிக்கப்பட்டுள்ளது'
செங்கலடி பகுதியில் பழமைவாய்ந்த பௌத்த விகாரைக்கு சொந்தமான இடத்தை புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,
நான் நேற்று செங்கலடி பகுதியிலுள்ள பழமை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமொன்றுக்கு சென்றேன்.
அந்தக் காணியின் உறுதிப்பத்திரம் முஸ்லிம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்கப்பட்டு, முழுமையாக புல்டோசர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அங்கிருந்த விகாரை பாதியளவில் அழிக்கப்பட்டு தள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, தகவலறிந்த பொலிஸார் அங்கு சென்று காவலரண் ஒன்றை அமைத்து, அது தொல்பொருள் பிரதேசம் என பெயரிட்டுள்ளனர்.
தொல்பொருள் பிரதேசம் என பெயரிட்டால் அந்தப் பகுதிகள் பாதுகாக்கப்படும். தொல்பொருள் சிறப்பு வாய்ந்த பிரதேசங்களை பாதுகாக்கும் பணிகளிலிருந்து தொல்பொருள் திணைக்களம் விலகிச் சென்றுள்ளது என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.
இதன் உண்மைத்தன்மையை யாரவது உறுதிப் படுத்துவார்களா?
ReplyDeleteA responsible Minister, when refering to a site of archeological importance, could have been more circumspect, and mature, for ethnicity of ownners/buyers really is not important here, other than to fuel communal fire.
ReplyDelete2nd Ganasara???
ReplyDeleteAarbichiteengaley.....
ReplyDeleteIF One individual from a society has committed a crime.. It can not be generalised. BUT
ReplyDeleteA politician can not be considered as an individual, as he represents all who voted him. So Keep your statement with responsibilities.
Your statement (true or false) is going to harm minoirty. NO use if later your statement is found to be false. So Clarify and handle it as an individual case and Do not try to connect it to a community.
இவர் நீதி அமைச்சரா அல்லது பீதி அமைச்சரா? இந்த செய்தியால் இவர் என்ன நாடுகின்றார் அமைச்சரே ஒரு முஸ்லிமும் ஒருதமிழரும் உங்கள் கோயில் பூமியை களவில் கைப்பற்றி விட்டார்களா அல்லது அவ்விடத்தில் வாழும் பௌத்தமக்களால் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் பலவந்தமாக கோயில் கட்டப்பட்டுள்ளதா?
ReplyDeleteஇந்த கோயில் பூமியில் ஒருமுஸ்லிமும் ஒரு இந்துவும் தவறுசெய்துள்ளார்கள் என்று உங்களால் சட்டமூலம் நிரூபிக்கமுடிந்தால் அவ்விருவருக்கும் சட்ட நடவடிக்கை எடுங்கள் மாற்றமாக பிரச்சினையை பொதுவாக்கி பீதியை உண்டுபன்னாதிர்
ReplyDeleteஇன்னும் கொஞ்ச காலத்தில் இலங்கை யில் அனைத்து இடத்திலும் விகாரை இருந்தது என்று சொவார்கள்.எங்கு போனாலும் புனித பௌத்த பூமி.தூசனம் சொல்வது ,கொலை செய்வேன் என்று சொல்வது,தீவைப்பேன் என்று சொல்லுவதல்லாம் அந்த இடத்தில் நின்று கொண்டுதான் அதுதான் இவர்களின் புனித பூமி.
ReplyDelete