Header Ads



அமெரிக்க நீர்முழ்கியை கைப்பற்றிய சீனா

சர்வதேச கடற்கரை பகுதியில் வைத்து சீனா கைப்பற்றி இருக்கும் அமெரிக்காவின் ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை ஒப்படைத்துவிட கோரியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வியாழக்கிழமையன்று தென் சீன கடலில் வைத்து அமெரிக்காவின் இந்த ஆளில்லா நீர்முழ்கி வாகனத்தை சீன கடற்படை கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

யுஎஸ்என்எஸ் பௌவ்டிச் என்கிற இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் கடலியல் சார் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.

"கடல் மிதவை" எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கருவி நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது.

நீருக்கடியிலுள்ள தடங்களை கண்டறிகின்ற வகைப்படுத்தப்படாத திட்டத்தின் ஒரு பகுதியாக இதனுடைய தரவுகள் அமைவதாக பென்டகனின் செய்தி தொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தி வெளியீட்டில், இந்த கருவி சீனாவால் எடுதுது செல்லப்பட்டுள்ளதாக கேப்டன் டேவிஸ் தெரிவித்தார்.

தென் சீனக் கடல் பகுதியில் இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் சட்டப்பூர்வமான முறையில் ராணுவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.அமெரிக்காவுக்கு சொந்தமானதாகும்.

நீரில் இருந்து அகற்றப்பட கூடாது என்று தெளிவாக ஆங்கிலத்தில் அதன் மேல் எழுதப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் சுபிக் குடாவிற்கு வட மேற்கே சுமார் 50 கடல் மைல் (80கி.மீ) தொலைவில் வைத்து சீன கடற்படை இந்த கருவியை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

உடனடியாக சீன கப்பலுக்கு செய்தி அனுப்பி அதனை ஒப்படைக்குமாறு கேட்ட பின்னரும் கண்டுகொள்ளாமல் போய்விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நீர்முழ்கி வாகனத்தை கைப்பற்றி இருப்பது தென் சீன கடலில் சீனாவின் அதிகரித்து வருகின்ற ராணுவ நடவடிக்கைகளை வெளிகாட்டுவதாக அமைந்துள்ளது. bbc

No comments

Powered by Blogger.