குடும்பத்துடன் நேரம் செலவிட, பதவியை ராஜினாமா செய்த பிரதமர்
எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ, குடும்ப காரணங்களுக்காக திடீர் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது வாழ்நாளில் எடுத்த மிகக் கடினமான முடிவு இதுவென்று குறிப்பிட்ட ஜோன் கீ, “நான் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை” என்றார்.
மக்கள் செல்வாக்குக் கொண்ட தலைவராக இருக்கும் கீ, 2017இல் நான்காவது தவணைக்கு போட்டியிடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் தேசிய கட்சி புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்யும் வரை துணை பிரதமர் பில் இங்லிஷ் பிரதமராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோன் கீ தனது ராஜினாமா குறித்து வானொலி ஒன்றுக்கு குறிப்பிடும்போது, தான் அதிக நேரம் குடும்பத்தினருடன் செலவிடுவதை மனைவி விரும்புவதாக தெரிவித்திருந்தார். எனினும் தனது மனைவி அதனை இறுதியானதாகக் கூறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் அரசியலுக்கு நுழைந்த கீ, நான்கு ஆண்டுகளின் பின் மைய வலதுசாரி தேசிய கட்சியின் தலைவரானார். 2008 ஆம் ஆண்டில் தொழில் கட்சியின் ஒன்பது ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தே பிரதமராக தேர்வானார்.
மனைவி மக்கள் என அனைவரையும் அரசியல் ஈடுபடுத்தி அனைத்து வரப்பிரசாதங்களையும் மட்டுமன்றி தேசிய செல்வங்களையும் முழுமையாக சுருட்டிக்கொள்ள பேராசைப்படும் இக்காலத்தில் தங்களின் இராஜினாமா உலகிற்கோர் படிப்பினைதான்.
ReplyDeleteஉலகலாவிய பேரறிஞ்ஞரும் செயற்பாட்டாளருமான மேன்மை நபி முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களதும் அன்னாரின் பயிற்சிப்பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்டு செங்கோலாட்சிசெய்த கலிபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களதும் பின்னாளில் தோன்றிய உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களதும் ஆட்சி முறைகளில் காணப்படும் படிப்பினைகளை தற்கால ஆட்சியாளர்கள் கடைப்பிடிப்பார்களாயின் உலக மாந்தர்கள் ஜனநாயகத்தின் ரசணையை அனுபவிப்பர்.
ஆனாலும் அத்தகைய ஆட்சிமுறையை இன்றைய ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்த முடியாது என்பதுதான் இன்றையநிலை.
இருப்பினும் எதிர்காலத்தில் சீரிய விழுமியங்களைக்கொண்ட இஸ்லாமிய ஆட்சி எற்படாது உலகம் அழிவதுமில்லை என்ற உண்மையும் உறுதிசெய்யப்படும்.