Header Ads



தவ்ஹீத் ஜமாஅத்தின், ஊடக அறிக்கை

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் தொடர்பில் செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் நாம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தாத செய்திகளை வெளியிடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக “தெரிய வந்துள்ளது” “நம்பகரமான வட்டாரத்தின் மூலம் அறியக் கிடைத்தது” “நம்பிக்கைக்குறிய ஒருவர் உறுதிப்படுத்தினார்” போன்ற வாசகங்களின் மூலம் நாம் சொல்லாத செய்திகளை சொன்னதாக பரப்புவது சமூக பொறுப்புணர்வு கொண்ட ஊடகத்தின் தன்மையாக இருக்க முடியாது என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தை பொறுத்த வரையில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை அதன் தூய வடிவத்தில் பிரச்சாரம் செய்யும் விடயத்தில் யாருடனும் எவ்வித சமரசத்தையும், விட்டுக் கொடுப்பையும் செய்ததில்லை, இனிமேலும் செய்யப் போவதுமில்லை என்பதில் தெளிவான நிலைபாட்டை கொண்ட அமைப்பாகும்.

சமுதாயப் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில், சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் யாருடனும் இணைந்து பயணிப்பதற்கு என்றும் தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவே இருக்கிறது. இது தான் ஜமாஅத்தின் கடந்த கால நிலைபாடும் தற்போதைய நிலைபாடுமாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளின் போது இணைந்து செயல்படுவதற்கு நாம் அழைத்த போதெல்லாம் நம்முடன் இணைந்து செயல்படாமல் வெறுமனே வட்ட மேசை மாநாடுகளை மாத்திரமே இஸ்லாமிய அமைப்புகள் நடத்தியது. ஆகவே தான் சமுதாய பிரச்சினைகள் விஷயத்திலும் நாம் தனித்து இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

23 முஸ்லிம் அமைப்புகளின் அறிக்கைக்கு எதிராக நாம் வெளியிட்ட 19.11.2016 ம் திகதிய அறிக்கையில் கூட இதனை விரிவாக தெளிவு படுத்தியுள்ளோம்.

நேற்றைய தினம் (21.12.2016) சகோ. மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ் அவர்களுடன் ஒரு சிநேகபூர்வ சந்திப்பு ஜமாஅத் தலைமையத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் சகோ. மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ் அவர்களோ, தவ்ஹீத் ஜமாஅத்தோ எவ்வித அறிக்கைகளையும் வெளியிடாத போது கற்பனையை செய்தியாக்கி பரவ விட்டிருப்பது என்பது ஊடக தர்மத்தை குழு தோண்டிப் புதைக்கும் செயல்பாடாகும்.

ஆகவே, ஊடகங்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதுடன், யாரைப் பற்றி எந்தச் செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும் அதனை உறுதிப்படுத்தாமல் வெளியிட வேண்டாம் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.

ஊடகப் பிரிவு
தவ்ஹீத் ஜமாஅத்

5 comments:

  1. Dear SLTJ, 1, why you all with such arrogance. 2, why you all can't say Muslim and come under one umbrella without creating such groups.

    ReplyDelete
    Replies
    1. Dear mohamed shahul
      Please try to understand what is THOWHEET and Muslim with meaningfully.
      If anyone follow and say about Islam means ( many) people are saying who are arrogance,it's shame on us
      Muslim must unit under an umbrella which should be the name of THOWHEET otherwise the name can be called as something

      We pray for it

      Delete
  2. அடிச்சான்யா....................பல்டி

    ReplyDelete
  3. Good lesson to jaffnamuslim

    ReplyDelete
  4. I agree with Borther Mohamed Shahul... YES we are Muslims we do not need to boast or stick to any groups in the name of Islam .. It can be TABLEEG, TAWHEED groups, JAMAT E ISLAMEE, SLATMATH or any .. Rather ACJU should work in favour of MUSLIMS BUT not in favour of any groups.

    ReplyDelete

Powered by Blogger.