அன்பின், ஞானசாரர் அவர்களுக்கு
அன்பின் ஞானசார தேரர் அவர்களுக்கு, இதைப் படிக்கும் போது பூரண உடல், உள ஆரோக்கியத்துடன் இருக்க எல்லாம் வல்ல, வணங்கத் தகுதிமிக்க அல்லாஹ்வைப் பிரார்த்தித்தவனாக இம்மடலை வரைகிறேன்.
அண்மையில், உங்களது ஊடகப் பேச்சொன்றைப் பார்த்தேன். அதில் தாங்கள் வெளியிட்ட கருத்துக்கள் இம்மடலை எழுதத் தூண்டியது. அதில் நீங்கள், பாவாத மலை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், இந்த அகிலத்தையும், அகிலத்தாரையும் படைத்த அல்லாஹ்வை நையாண்டி பண்ணி இருந்தீர்கள். அல்லாஹ் சிறுநீர் கழித்த மலை என்பதால் முஸ்லிம்கள் அதனை தமக்குரியதாக்க சூழ்ச்சி செய்கிறார்கள் என்று குறிப்பிட்டீர்கள்.
சில வருடங்களாக முஸ்லிம்களுக்கெதிராக சமயம், பொருளாதாரம், வரலாறு என பல துறைகளில் நீங்கள் கருத்துக்கள் தெரிவித்த அதேவேளை, வன்முறையிலும் இறங்கி உள்ளீர்கள். முஸ்லிம்கள் தம் நாட்டை உளமாற நேசிப்பதால், உங்களின் பொறாமைத் தனமான செயற்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்து நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக்க விரும்பவில்லை.
நீங்கள் எதிர்பார்த்தது நடக்காததால் முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக மதிக்கின்ற அல்லாஹு வை கீழ்ததரமாக பழிக்கிறீர்கள்.
இந்த இடத்தில் எங்கள் பக்கமுள்ள பிழையை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான், அல்லாஹு வைப் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெளிவாக விளக்காமையாகும்.
ஹாமதுரு அவர்களே, அல்லாஹ் என்பவன் முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள கடவுள்தானே தவிர, அவர்கள் தங்களுக்காகத் தாங்களாகளாவே உருவாக்கிக் கொண்டவனல்ல. அவன்தான் இந்த அகிலத்தாரின் இரட்சகன். உண்மையான படைப்பாளன். இந்த உலகை ஆளும் வல்லமை உள்ளவன். உங்களையும் எங்களையும் அதே போல் அனைத்தையும் படைத்த ஒரே இறைவன். நீங்கள் அல்லாஹ்வை ஏசினால் உங்களைப் படைத்தவனையே ஏசுகிறீர்கள்.
அல்லாஹ் முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை இறைவனே தவிர அவன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவனல்ல. அல்லாஹ் தன்னை அப்படி சொல்லவுமில்லை.
அல்லாஹ் முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை இறைவனே தவிர அவன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவனல்ல. அல்லாஹ் தன்னை அப்படி சொல்லவுமில்லை.
அல்லாஹ் தன்னை 'ரப்புல் ஆலமீன்' அகிலத்தாரின் இரட்சகன் எனறு அறிமுகம் செய்திருப்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை போலும். அதனால்தான் அல்லாஹ்வை நீங்கள் வெறும் ஜடமாகக் கற்பனை செய்து வசைபாடுகிறீர்கள். உங்களைப் படைத்தவனை நாங்கள் அறிந்திருந்தும் அது பற்றி விளக்காதது எமது தவறுதான். அல்லாஹ் எங்களை மன்னித்தருள வேண்டும்.
முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட பொறாமையும் காழ்ப்புணர்வும் அல்லாஹ்வைச் திட்ட வைத்துவிட்டது. அல்லாஹ் பற்றிய விளக்கமின்மையே காரணம் என நினைக்கிறேன்.
ஹாமதுரு அவர்களே, அல்குர்ஆனில் இகலாஸ் என்றொரு அத்தியாயம் உள்ளது. அது அல்குர்ஆனின் 112 ஆவது அத்தியாயம். அதில் அல்லாஹ் தன்னைப் பற்றி சுருக்கமாக தெளிவாக விபரிக்கிறான். அதை உங்களைப் போன்ற ஞானவாதிகள் திறந்த மனதோடு வாசித்தால் அல்லாஹ்வைப் புரிந்துகொள்வீர்கள். அதில், அல்லாஹ் ஒரவன் எனவும், அவன் (பசி, தாகம், தூக்கம், மலசலம், களைப்பு போன்ற ) எந்த தேவையும் அற்றவன் எனவும், அவன் (படைப்பினங்களைப் போல்) பிறக்காதவன் எனவும் அவன் யாரையும் பெற்றெடுக்காதவன் எனவும், அவன் எவ்விதஒப்புவமையும் இல்லாதவன் எனவும் குறிப்பிடுகிறான்.
ஹாமதுரு அவர்களே, உங்களைப் படைத்தவனை நீங்கள் கேவலப்படுத்துவது அறிவுடமையாகாது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிவீர்கள் என்றில்லை.
அதே போல் உங்கள் கையாட்களை வைத்து பன்றியின் உருவத்தின் மீது அல்லாஹ் என்று எழுதி, முஸ்லிம்களைச் சீண்டினீர்கள். பன்றியைப் படைத்தவனும் அல்லாஹ்தான் ஹாமதுரு அவர்களே.
படைத்தவனுக்குத்தான் தெரியும் அதன் தன்மை பற்றி. அதனால்தான் எம்மை உண்ண வேண்டாம் என்று தடைவிதித்துள்ளான். படைத்தவன் சொன்னதற்காகத்தான் முஸ்லிம்களை அதனை அசுத்தமாகப் பார்க்கின்றனர். ஹாமதுரு அவர்களே, படைத்தவனின் பெயரை அவனது படைப்புக்கு மேல் எழுதுவதால் படைத்தவனுக்கு கேவலம் வரப்போவதில்லை என்பதை உங்களைப் போன்ற ஞானவாதிகளுக்கு விளங்காத ஒன்றல்ல.
அடுத்து முஸ்லிம்கள் இஸ்லாமிய ஷரீஆ வழியில் வாழ விரும்புகின்றனர். அதற்கு அரச அங்கீகாரம் கோருகின்றனர். அதற்காக நீங்கள் ஏன் மண்டையை உடைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உண்மை பெளத்தனாக வாழ விரும்புவதை நாங்கள் வெறுப்பது அறிவார்த்தமானதல்ல. அதே போல் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் படி வாழ விரும்புவதை நீங்கள் வெறுப்பது நாகரீகமானதல்ல என்பதை நீந்கள் அறியாதவருமல்ல.
இறுதியாக, ஹாமதுரு அவர்களே, எல்லாருக்கும் பொதுவான அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்கு எத்திவைத்து விட்டேன். என் மீதிருந்த கடமை நீங்கி விட்டது. இப்போது உங்களைப் படைத்தவனைப் பற்றி அறிவது உங்களுக்கு தார்மீக கடமையாகி விட்டது. மரணத்தின் பின்னுள்ள மறு வாழ்வில் அவனை நஆம் நேரடியாக சந்திக்க வேண்டி உள்ளது. அவனது முகத்தைக் காணும் ஆவலில் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்.
ஹாமதுரு அவர்களே, அல்லாஹ் மறைவானவன். அவனை இவ்வுலக வாழ்வில் காண முடியாது. ஆனால், மரணத்தின் பின் அவனையும் அவனது திருமுகத்தையும் காண்பதற்காகவே இவ்வுலகில் முஸ்லிமாக வாழ வேண்டியுள்ளது.
ஹாமதுரு அவர்களே, பிறப்பு எவ்வளவு உண்மையோ, நிச்சயமோ அதுபோல இறப்பும் உண்மை, நிச்சயம். பிறப்புக்கு முன்னர் கருவரை வாழ்க்கை எவ்வளவு உண்மையோ, சாத்தியமோ அதுபோலவே இறப்புக்குப் பின்னரான வாழ்வும் நிதர்சனமாது.
எம்மைப் படைத்த அல்லாஹ்வே மீண்டும் எம்மை எழுப்பி விசாரிக்கும் போது முஸ்லிகள் சொல்லித் தரவில்லை என நீங்கள் தப்ப முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியைத் தருவானாக!
இப்படிக்கு,
அல்லாஹ்வின் அடியான்
எஸ்.எஸ்.றமழான்
I think he- Ganasera- obviously understands what he is doing. It is not because he doesn't understand about Islam. It is the jealousy. It is the business- making trouble. What else?? This article needs to be translated into Singhalese.
ReplyDeleteMr. Ramalan, Muslim என்று அறியப்படாத எந்த ஒருவருக்கும் இப்படி (சுகம் வேண்டி,சுவர்க்கம் வேண்டி,பலம் வேண்டி ஆனால் ஹிதாயத் வேண்டி கேக்கலாம்) துஆ கேக்க கூடாது என்று கேள்விப்பட்டுளேன் ஆகவே இதன் பிறகு செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன், தங்களுடைய முயற்சி நல்லது,தாவா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஹிதாயத் அல்லாஹ்விடம் இருந்து வரணும், அல்லாஹ் நாட்டம் இருப்பின் இந்த நாட்டின் அணைவருக்கும் ஹிதாயத்தை தந்தருள்வானாக
ReplyDeleteGood post. சிங்ளத்தில் மொழி பெயர்த்து ஹாமதுரு அவருக்கும், சிங்கள மீடியாவிற்கும் அனுப்புமாறும் வேண்டுகிறேன்.
ReplyDeletemaasaa allah.may reward u brother
ReplyDeleteMasha Allah... an Excellent Response on Almighty ALLAH
ReplyDeleteஞானசாரைக்கு முக்கியத்தவம் கொடுத்ததால் வந்த விலைவு..
ReplyDeleteBrother...excellent for the sake of almighty Allah. Please translate it to Sinhala & transmit.
ReplyDelete