தொல்பொருள் ஆய்வுக் குழுவுக்கு, சிறுபான்மையினரையும் உள்வாங்குக - அஸ்வர்
நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும், முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் நாட்டின் தொல்பொருள் மிக்க பிரதேசங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது பற்றி கருத்து தெரிவித்தே அவர் இதனை தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டினுடைய தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதுக்கு நடவடிக்கை எடுப்பது வரவேற்கக் கூடியது. முஸ்லிம்கள் தொடர்பாகவும் தமிழர்கள் தொடர்பாகவும் பல தொல்பொருள் பிரதேசங்கள் இருக்கின்றன. ஆகவே, அது தொடர்பாகவும் ஆராய்ந்து அவற்றைப் பாதுகாப்பது அவசியமாகும்.
உதாரணமாக பலாங்கொடையில் தப்தர் ஜெயிலானி முஸ்லிம்களோடு தொடர்புடைய ஒரு முக்கியமான வழிபாட்டுத்தலமாகும். ஆகவே இது தொடர்பாக நியமிக்கப்பட்டிருக்கும் குழவுக்கு ஒரு முஸ்லிம், தமிழ் பிரதிநிதியும் உள்வாங்கப்படுவது சிறந்தது. அப்போதே நாட்டின் முழுமையான தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் இந்த வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.
Post a Comment