முஸ்லிம்களின் முன்மாதிரி, கிறிஸ்த்தவர்களுக்கு கொண்டாட்டம்
லண்டனிலுள்ள யாசர்களுக்காக நத்தாரை முன்னிட்டு 10 தொன் உணவுப் பொருட்களை பிரித்தானிய முஸ்லிம்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
முஸ்லிம் எய்ட் அமைப்பின் உதவியுடன் கிழக்கு லண்டன் பள்ளிவாசல் மற்றும் லண்டன் முஸ்லிம் மத்திய நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப் பொருட் கள் சேகரிப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் முஸ்லிம்கள் இந்த உணவுப்பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். சுமார் 7500 பேர் பொருட்களை அன்பளிப்புச் செய்ததாகவும் இதன்மூலம் 10 தொன் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அரிசி, நூடில்ஸ், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் போன்ற பொருட்கள் சேகரிக்கப்பட்ட பொருட்களில் அடங்கியிருந்தன. பள்ளிவாசலுக்கு வந்தோரால் 7 தொன் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகவும் உள்ளூர் வர்த்கத நிறுவனங்கள், பாடசாலைகள், பல் கலைக்கழகம் ஆகியனவும் பொருட்களை வழங்கியதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட பொருட்களில் 90 சதவீதமானவை யாசகர்களுக்கான தொண்டர் அமைப்புகள் மூலம் முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு கிறிஸ்மஸை முன்னிட்டு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“கிழக்கு லண்டன் பள்ளிவாசலின் பிரதம இமாம் ஷேக் அப்துல் கையும் இது தொடர்பாகக் கூறுகையில், முஸ்லிம்கள் தமது மத நம்பிக்கைகளால் ஏனையவர்களுக்கு உதவுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஒரு நபரின் நம்பிக்கை, பின்னணி குறித்த பாகுபாடின்றி, தேவையுள்ளவர்களுக்கு உதவுவது முஸ்லிம்களின் கடமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந் நடவடிக்கையை பாராட்டிய கிறிஸ்தவ மதகுருவான கெறி பிரட்லி, அனைத்து மதங்களும் பொதுவான மனிதாபிமானத்தை நோக்கி செயற்படுகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம் எனக் கூறியுள்ளார்.
பிரிட்டனில் கடந்த வருடம் 3500 பேர் வீடின்றி தினமும் வீதிகளில் உறங்கியதாக அரசாங்க புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 30 சதவீத அதிகரிப்பாகும்.
Post a Comment