'இன நல்லிணக்கம் பற்றி பேசவேண்டாம், என சீனியர் அமைச்சர்கள் கூறினார்கள்'
இலங்கையில் கடந்த எந்த அரசாங்கமும் செய்யாத இன நல்லிணக்க வேலைத்திட்டத்தை இன்றைய அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுத்துவருகின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மட்டக்களப்பில் தெரிவித்தார்.
மாணவர்களின் தேசிய நல்லிணக்க செயற்றிட்டமான 'சகோதர பாசல' எனும் செயற்திட்ட முகாம் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றபோது அதன் நிறைவு வைபவத்தில் கலந்துரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம் இல்லாததன் காரணம் தான் கடந்த முப்பது வருட யுத்தமாகும் என்பதை நாம் அடையாளம் கண்டோம்.
யுத்தத்துக்கு முகம் கொடுத்தவர், அந்த பிரச்சினைகளுடன் வாழ்ந்தவர் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தவர் என்ற ரீதியில் இந்த இன ரீதியான பிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதற்கு தீர்வு காணவேண்டுமென நினைத்தேன்.
11 வருடங்கள் நீங்கள் ஜனாதிபதியாக இருந்தீர்கள் தானே நீங்கள் என்ன செய்தீர்கள் என நீங்கள் என்னிடம் கேட்கலாம்.
நான் அதிகாரத்துக்கு வந்தவுடனயே சமாதானத்துக்கான வேலைத்திட்டம் தொடர்பில் பேசினேன் அப்போது சில சிரேஷ்ட அமைச்சர்கள் அவ்வாறு இன நல்லிணக்கத்தைப் பற்றி பேச வேண்டாம் உங்களுக்கு வாக்கு குறைந்து விடும் என்று கூறினார்கள்.
ஆனால் நான் வடக்கிலிருந்து தெற்கு ,கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் இன நல்லிணக்கத்தையும் சமாதானத்தையுமே பேசினேன். மக்கள் எனக்கு அதன் மூலம் பெருமளவிளான ஆதரவைத் தந்தார்கள் என தெரிவித்தார்.
What about BBS, Singhala Raavaya, Singhale...etc....?
ReplyDelete