Header Ads



இலங்கையின் முதற்தர உயர்கல்வி நிறுவனம் BCAS Campus இன், பட்டமளிப்பு விழா - 2016

-ஏ.எல்.எம். ஸபீல்- 

இலங்கையின் முதற்தர தனியார் உயர்கல்வி நிறுவனமான BCAS Campus நடாத்திய வருடாந்த பட்டமளிப்பு விழா கொழும்பில் மிக விமரிசையாக இடம்பெற்றது. மகிந்த ராஜபக்ஸ தாமரைத் தடாக (Nelum Pokuna) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இம்மாபெரும் பட்டமளிப்பு விழா இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வாக BCAS Campus வளாகத்தில் பட்டப்படிப்புகளையும் முதுமானிப் பட்டப்படிப்புகளையும் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு பிரித்தானியாவின் University of  Wolverhampton  பல்கலைக் கழகத்தினால் நேரடியாக வழங்கப்படும் பட்டங்களும் முதுமானிப் பட்டங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதில் Wolverhampton பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் Geoff Layer அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி வைத்தார். இதன்போது மருத்துவ விஞ்ஞானம் (Biomedical Science ) வர்த்தக முகாமைத்துவம் (Business Mgt ) கணணி (Computing ) மற்றும் சட்டம் (Law) ஆகிய துறைகளில் பட்டப் படிப்புகளைப் பூர்த்தி செய்த 230 பட்டதாரிகளுக்கு  பட்டங்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் கட்டட நிருமானத்துறை (Construction Project Mgt) வர்த்தக முகாமைத்துவம் (Business Mgt) மற்றும் சட்டம் (Law) ஆகிய துறைகளில்  முதுமானிப் பட்டங்களைப் பூர்த்தி செய்த 135 மாணவர்களுக்கு முதுமானிப் பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இப்பட்டங்களை wolverhampton பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் அவர்கள் BCAS Campus இன் கல்வித்துறைப் பீடாதிபதி பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரகமே, அதன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து பட்டங்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார்.

இரண்டாவது அமர்வில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் BCAS Campus இல் பட்டப்படிப்புகளைப் பூர்த்தி செய்து London SouthBank பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்புகளைப் பூரத்தி செய்த 61 மாணவர்களுக்கு பட்டங்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட London South Bank University  இன் உபவேந்தர் Prof. Paul Ivey அவர்களும் BCAS Campus  கல்வித்துறைப் பீடாதிபதி பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரகமே மற்றும் அதன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் BCAS Campus கற்று BTEC HND  பாடநெறிகளைப் பூரத்தி செய்த 644  மாணவர்களுக்கான  சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் விசேட விருந்தினர்களாக Wolverhampton பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும்   Pearson UK நிறுவனத்தின் தலைமை அதிகாரி Pramila Paulraj அவர்களும் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு பொறுப்பான திரு.Soorya Bibile அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் BCAS Campus  இன் ஆளுனர் சபையின் உறுப்பினர்களான பேராதனை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடத்தின் தலைவர் பேராசிரியர் Lamawanse அவர்களும் ருஹூனு பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் முன்னாள் பல்கலைக் கழக மானியங்கள் ஆனைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் Rohan Rajapakshe அவர்களும்  நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர் .

மொத்தமான 700 இற்கு அதிகமாக பட்டதாரிகளும் 2000 இற்கு அதிகமான பெற்றோர்களும் ஏனைய விருந்தினர்களும் கலந்து கொண்ட இம்மாபெரும் பட்டமளிப்பு நிகழ்வின் போது UK பல்கலைக் கழக உபவேந்தர்களும்  BCAS Campus  கல்வித்துறைப் பீடாதிபதி பேராசிரியர் ஷானிகா ஹிரும்புரகமே அதன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோரும் விஷேட உரைகளை நிகழ்த்தினர்.

இலங்கையின் தனியார் உயர்கல்வித்துறையின் முன்னோடி நிறுவனமாகவும் கடந்த 18 வருடங்களாக சேவையாற்றிவரும் BCAS Campus, Computing, Business Mgt, Civil Engineering, Quantity Surveying , Biomedical Science  மற்றும்  Telecom Engineering  ஆகிய துறைகளில் அடிப்படை பாட நெறிகள் தொடக்கம் BTEC HND மற்றும் Top Up Degree , Masters என பல்வேறு மட்டங்களிலும் சர்வதேச பல்கலைக் கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளை இலங்கையிலேயே மாணவர்கள் பூர்த்தி செய்யக் கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது. அத்தோடு இப்பட்டப்படிப்புகள் இலங்கையின் பல்கலைக் கழக மானியங்கள் ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொழும்பு, கல்கிஸ்லை, கண்டி, குருநாகல், மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பானம் ஆகிய இடங்களில் வளாகங்களையும் துனை வளாகங்களையும் கொண்டு இயங்கும் BCAS Campus சிறப்பான கல்விச் சேவைக்காக நான்கு சர்வதேச விருதுகளை இவ்வாண்டில் பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





1 comment:

  1. The Title should include " IN PRIVATE SECTOR ", since there are much more batter HIGHER EDUCATION INSTITUTION in Government sectors.

    ReplyDelete

Powered by Blogger.