ஹிஸ்புல்லாவுக்கு BBS அனுப்பிய மொட்டைக் கடிதம்
‘இந்நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதமேந்துவார்கள். இதை எவராலும் தடுக்க முடியாது’ என தாங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை சாதாரணமானதொன்றல்ல.
இந்நாட்டு சிங்கள பெளத்தர்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் எதிரான மிலேச்சத்தனமான இஸ்லாமிய ஜிஹாத் அண்மையில் வருகிறது என்பது இந்த எச்சரிக்கையின் பின்னணியாகும் என பொதுபலசேனா அமைப்பு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இந்நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எதிராக செய்யப்பட்ட இனவாத எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையிலே விடுவிக்கப்பட்டுள்ளதென்பதை நாம் மிகவும் பொறுப்புடன் கூறுகிறோம் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016.12.25 ஆம் திகதியிடப்பட்டுள்ள குறிப்பிட்ட கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘குர்ஆனின் போதனைகளைக் குறிப்பிட்டுக்காட்டி எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம் ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துக்கான பதிலாகும். இந்நாட்டில் பெரும்பான்மையான சம்பிரதாய முஸ்லிம்கள் பௌத்த கலாசாரம் மற்றும் அஹிம்சைவாத கோட்பாடுகளுக்குள் நீண்டகாலம் வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் இவ்வாறான கருத்துகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நாம் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் நாட்டில் கலவரத்தை உருவாக்குவதற்காகவல்ல. எதிர்காலத்தில் உருவாகவுள்ள கலவரங்களைத் தடுப்பதற்காகும். உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாது. அரசியல் சண்டித்தனத்தை நிறுத்தி அறிவூபூர்வமான கலந்துரையாடலொன்றுக்கு நல்லிணக்கத்துக்காக முஸ்லிம் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இஸ்லாம் என்பது இஸ்லாமே தான். இஸ்லாம் இந்நாட்டில் மாத்திரம் மாற்றமடையப் போவதில்லை. ஏனைய இஸ்லாம் அல்லாத நாடுகள் மற்றும் அங்குள்ள இஸ்லாமியரல்லாத மக்களை முழுமையாக அழித்து செயற்பட்ட இஸ்லாமிய கோட்பாடுகள் மற்றும் இஸ்லாத்துக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள ஜிஹாத் இந்நாட்டில் மாத்திரம் நடைமுறையில் இல்லை என இஸ்லாத்திலோ குர்ஆனிலோ எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டில்லை.
ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் விடுத்த எச்சரிக்கை ஞானசார தேரருடன் மிக சூட்சுமமாக சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. ஊடக மாநாடொன்றில் குர்ஆனின் போதனைகள் தொடர்பாக ஞானசார தேரர் தெரிவித்த கருத்துகள் இஸ்லாத்தை அவமதித்துள்ளதாகக் குறிப்பிட்டே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாஹ்வின் எச்சரிக்கையின் பின்னணியில் மறைந்துள்ள இஸ்லாமிய போதனைகள் மற்றும் முஸ்லிம் தலைவராக அவர் இதன்மூலம் எதிர்பார்த்துள்ளவைகளை நாம் நாட்டுக்கு பகிரங்கப்படுத்துவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கு முன்பு ஞானசார தேரர் ஊடக மாநாட்டில் இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் பேசினாரா என்பதை விசாரித்து அறியவேண்டும்.
இந்நாட்டில் சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் தேசியப் பாதுகாப்பினைப் பாதிக்கும் வகையில் உள்ள இஸ்லாமிய கோட்பாடுகள் குர்ஆனின் சில போதனைகளை ஞானசார தேரர் குறிப்பிட்டு அவற்றுக்கு விளக்கமளிக்குமாறும் அது தொடர்பாக பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறும் மாத்திரமே கருத்து வெளியிட்டிருந்தார்.
இஸ்லாத்தின் போதனைகளை பகிரங்கப்படுத்துவது எவ்வாறு இஸ்லாத்தை அவமதிப்பதாகும் என்பதை ஹிஸ்புல்லாஹ்வும் ஏனைய இஸ்லாமிய இயக்கங்களும் எமது சமூகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு செயற்படாது ஞானசார தேரரின் ஊடக மாநாட்டின் பின்பு இஸ்லாமிய அமைப்புகளும் முஸ்லிம் தலைவர்களும் மண்ணெண்ணையில் பட்ட பாம்புகளைப் போல் குழப்பமடைந்துள்ளமை எமது சமூகத்துக்குள் ஏதோவொன்றினை மூடி மறைக்கும் முயற்சியல்லவா?
இஸ்லாம் என்பது முஸ்லிம் மக்களின் வாழ்க்கை குர்ஆன் அந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான வழிகாட்டி என்றே இஸ்லாமியர்கள் எம்மத்தியில் தெரிவிக்கிறார்கள் என்றாலும் அந்த இஸ்லாமிய போதனைகள் என்ன என்பதை முஸ்லிம் மக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் குர்ஆனைப் பற்றி ஞானசார தேரர் வெளியிட்டுள்ள விபரங்கள் இலங்கையின் முழுச் சமூகமும் மிகவும் பாரதூரமாக கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
குர்ஆன் மற்றும் ஹதீஸின் போதனைகளின்படி இஸ்லாத்தின் ஒரே இலக்கு படிமுறையான செயற்பாடுகளினால் முஸ்லிம் அல்லாத சமூகங்கள் ஏனைய மதங்களின் சின்னங்கள் என்பவற்றை அழித்து அந்நாட்டை முழுமையாக கைப்பற்றிக்கொள்வதாகும். பின்பு இந்த பூமியை இஸ்லாமியர்களுக்கு மாத்திரமான பூமியாக மாற்றிக் கொள்வதாகும். இந்நாட்டில் முஸ்லிம்கள் பலம் பெறுவதற்கு முன்பு இஸ்லாத்தின் மிலேச்சத்தனமான போதனைகள் என்ன என்பது இந்நாட்டுக்கு தெரியவந்தால் நிச்சயமாக இஸ்லாத்தின் ஆடைகளைந்து அதன் மிலேச்சத்தனம் நிர்வாணமாகும்.
அல்லாஹ்வின் பாதை அழிந்து போவதை தடுக்க முடியாமற் போகும். இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு இது பற்றி மிகவும் தெளிவுள்ளது. ஞானசார தேரரின் இஸ்லாத்தைப் பற்றிய வெளிப்படுத்தல்களின் பின்பு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மதத்தலைவர் குழப்பமடைந்துள்ளார்கள். இதேவேளை ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.
ஹிஸ்புல்லாஹ்வின் எச்சரிக்கையின் பின்னணியில் மறைந்துள்ள இஸ்லாமிய போதனைகள் என்ன என்பதை அறிவது எமது நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானதாகும். முஸ்லிம் இளைஞர்கள் விரைவில் ஆயுதமேந்துவார்கள். அதைத் தடுப்பதற்கு எவராலும் முடியாது. என ஹிஸ்புல்லாஹ் கூறியிருக்கிறார் அவ்வாறு அவர் ஆயுதமேந்தி களத்தில் குதிப்பது இந் நாட்டின் பாதுகாப்பு பிரிவினருக்கும் நிராயுதபாணிகளான பௌத்த மக்களுக்கு எதிராக என்பது தெளிவாகும்.
அவர் இவ்வாறான பாரதூரமான கருத்தினைத் தெரிவித்திருப்பது முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான சதி முயற்சியொன்று உருவாகிவருகிறது. கட்டியெழுப்பப்படுகிறது என்பதினாலாகும். அவர்கள் இதற்காக ஆயுதங்களை இரகசியமான முறையில் சேகரிப்பதனாலாகும். இஸ்லாமிய போதனைகளின்படி இவ்வாறு செயற்பட்டு ஏனைய மதத்தவர்களிடம் பீதியை ஏற்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டுள்ள கடிதத்தில் குர்ஆன் ஆயத்துக்கள் சிலவற்றுக்கும் சஹீஹ் அல்புஹாரி ஹதீஸ்களுக்கும் விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
ஹிஸ்புல்லாஹ் கருத்து
பொதுபலசேனா அமைப்பினால் குர்ஆன் ஹதீஸின் சில பிரிவுகளுக்கு விளக்கம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கடிதம் மூலமே கோரப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியவரின் கையொப்பம் பதிவு செய்யப்படவில்லை. கடிதத்துக்கு பதில் நிச்சயம் அனுப்புவேன். அதேவேளை கையொப்பம் எதுவுமில்லாமல் கடிதம் அனுப்பியதற்கான விளக்கத்தை பொதுபலசேனாவிடம் கோரியிருக்கிறேன். ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதமேந்துவார்கள். இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்ற எனது கருத்தையும் விமர்சித்திருக்கிறார்கள். அதற்கு பதிலளிக்கவும் தயாராக இருக்கிறேன் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பினால் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் விளக்கம் கோரியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது; குர்ஆன் மற்றும் ஹதீஸின் சில அத்தியாயங்களுக்கான விளக்கங்களும் கோரப்பட்டுள்ளன. குர்ஆனையும் ஹதீஸையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். பொதுபலசேனா அமைப்பு உத்தியோகபூர்வ கையொப்பத்துடன் கடிதம் அனுப்பினால் பதில் அனுப்பப்படும். பிரபல்யமான உலமாக்களைக் கொண்ட குழுவொன்றினை அமைத்து அக்குழு மூலமே பதில் தயாரிக்கப்படும் என்றார்.
ARA.Fareel - விடிவெள்ளி
இந்த நாட்டு மக்கள் வாக்களித்தது ஜனாதிபதி மைத்திரிக்கா அல்லது ஞானசார தேரருக்கா அரசு பார்க்க வேண்டிய விடயங்கள் எல்லாம் இவன் பார்ப்பது என்றால் இவரு எதற்கு ஜனாதிபதியாக இருக்கிறார் தேசிய பாதுகாப்பு என்றும் நாட்டு பாதுகாப்பு என்றும் சமாதானம் என்றும் பலவகையிலும் இவர் தலை ஒட்டுவர்த்து என்றால் இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது.இப்படி ஒரு அரசாங்கம் இந்த நாட்டுக்கு தேவைதானா?அரசாங்கத்தில் அனைத்து விடயங்களிலும் இவன் மூக்கை நுழைக்கிறான்.அவர்களும் மௌனம் காக்கின்றார்கள் இதுக்கு போய் நல்லாட்சி என்று பெரு வேற!!!
ReplyDeleteThis is how they play their game. How about the words " They first kill Muslim politicians"?? The cut & paste. That's why we need to be careful when we utter these words.
ReplyDeleteஜம்மியதுல் உலமா அவன் அனுப்பிய கடிதத்திற்கு சரியான முறையில் பதில் அனுப்பி இருந்தால் இவன் இப்படியான கடிதங்கள் அனுப்பமாட்டான்...
ReplyDeleteIt is a pity that the Ven.gnasara is doing everything other than preaching the Damma that the lord Budha has told to his followers.
ReplyDeleteBudhism never preaches communalism, the knowledgeable Ven Theros never condemn other religions,nor spread lies about other religions. but empty vessels like gnasara (sic) make much noise but the truth will come to light very soon to expose them