A/L பரீட்சை முடிவுகள் தாமதம் - விசாரணை நடத்த கோரிக்கை
2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என, இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அச் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அதே வருடம் டிசம்பர் மாதம் வௌியிடப்பட்ட நிலையில், 2015ம் ஆண்டுக்கான பெறுபேறுகள் 2016 ஜனவரி 2ம் திகதியே வௌியானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வருடாந்தம் பெறுபேறுகள் இவ்வாறு தாமதமடைவதாகவும், இதனால் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் ஜோசப் ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேசிய பரீட்சைகள் தொடர்பில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளமையானது பாரிய பிரச்சினை என குறிப்பிட்டுள்ள அவர், பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமடைவது பற்றி உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, தமது சங்கம் பிரத மர் மற்றும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும்இம்முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை விரைவில் வௌி யிட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment