Header Ads



பேச்­சு­க்கு நேரம்கேட்டு, ACJU க்கு, SLTJ கடிதம்

அல்­குர்­ஆனில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில விட­யங்கள் தொடர்பில் தெளிவு­களை வழங்­கு­மாறு கோரி அண்­மையில் பொது பல சேனா அமைப்பு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­தி­ருந்­தது. அக் கடி­தத்­துக்கு உலமா சபை பதி­ல­ளிக்க வேண்டும் எனக் கோரியும் அது தொடர்­பாக உலமா சபையை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்த நேரம் தரு­மாறு கோரியும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் உலமா சபைக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்­துள்­ளது.

அமைப்பின்  பொதுச் செய­லாளர் ஆர். அப்துர் ராசிக் ஒப்­ப­மிட்டு உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்­திக்கு அனுப்பி வைத்­துள்ள இக் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

நாட்டில் இன­வாதம் மீண்டும் தலை­யெ­டுத்­துள்ள இந்­நி­லையில் கடந்த 18.11.2016 திக­தி­யி­டப்­பட்டு பொது பல சேனா அமைப்­பி­லி­ருந்து அகில இலங்கை ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு ஒரு கடிதம் அனுப்பப் பட்­டி­ருந்­தது. குறித்த கடிதம் ஊட­கங்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்டு சமூக வலை தளங்­க­ளிலும் பரப்­பப்­பட்­டது. பொது பல சேனா­வினால் உலமா சபைக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்த குறித்த கடி­தத்தில் புனித திரு­மறைக் குர்­ஆனில் இடம் பெற்­றுள்ள சில முக்­கிய வச­னங்­க­ளுக்கு விளக்கம் கோரப்­பட்­டி­ருந்­த­துடன் சில நபி மொழி­க­ளுக்கும் விளக்கம் தரும்­படி கோரி­யி­ருந்­தார்கள்.

பொது பல சேனாவின் கடி­தத்­திற்கு கட்­டாயம் முறை­யான பதி­ல­ளிக்க வேண்டும்

ஏக இறைவன் மூலம் மனித குலத்­திற்கு வழி­காட்­டி­யாக அனுப்­பப்­பட்ட இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்­க­ளுக்கு இறை­வ­னிடம் இருந்து வஹி மூலம் அறி­விக்­கப்­பட்ட புனித குர்ஆன் தொடர்பில் உலகில் அனைத்து பகு­தி­க­ளிலும் கேள்­விகள் எழுப்பப் படு­கின்­றன, விமர்­ச­னங்­களும் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. அவை அனைத்­துக்கும் அவ்­வப்­போது இஸ்­லா­மிய அறி­ஞர்கள் பதி­ல­ளித்து வரு­கி­றார்கள்.

இலங்­கை­யிலும் கடந்த சில வரு­டங்­க­ளாக குர்ஆன் தொடர்­பிலும், நபி­ய­வர்கள் தொடர்­பா­கவும், இஸ்­லாத்தை கடு­மை­யான முறையில் விமர்­சனம் செய்தும் மாற்று மத நண்­பர்­க­ளினால் கேள்­விகள் முன் வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவற்­றுக்கு நாம் பதி­ல­ளிக்­காத நிலையில் “எமது கேள்­வி­க­ளுக்கு இஸ்­லாத்தில் பதி­லில்லை” இஸ்லாம் பயங்­க­ர­வாத மார்க்கம் என்ற தோற்­றப்­பாட்டை சாதா­ரண பௌத்த மக்கள் மத்­தியில் உண்­டாக்கி விடும். ஆகவே மாற்று மதத்­த­வர்கள் இஸ்லாம் தொடர்பில் முன் வைக்கும் கேள்­வி­க­ளுக்கு அழ­கிய பதில்­களை வழங்க வேண்­டி­யது எமது கட­மை­யாக உள்­ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாடு முழு­வதும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற தலைப்பில் சிங்­களம் மற்றும் தமிழ் மொழி­களின் மாற்று மத நண்­பர்­களை அழைத்து இஸ்லாம் பற்றி அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அர்த்­த­முள்ள சந்­தே­கங்­க­ளுக்கு குர்ஆன் மற்றும் நபி­ய­வர்­களின் வழி­காட்டல் மூலம் அர்த்­த­முள்ள பதில்­களை மாற்று மத நண்­பர்கள் திருப்­திப்­படும் வகையில் வழங்கி வரு­கிறோம். நாட­லா­விய ரீதியில் மாற்று மத மக்கள் மத்­தியில் இந்­நி­கழ்ச்சி பெரும் வர­வேற்பைப் பெற்று வரு­கி­றது.

அந்த வகையில் தற்­பொது பொது பல சேனா அமைப்பு சார்பில் உலமா சபைக்கு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில் புனித குர்­ஆனின் வச­னங்­க­ளுக்­கான விளக்­கங்கள் கோரப்­பட்­டுள்­ளன. இவற்­றுக்கு உரிய முறையில் பதி­ல­ளிப்­பது இலங்கை வாழ் இஸ்­லா­மிய சமு­தா­யத்தின் கடப்­பா­டாக உள்­ளது.இது­வரை காலமும் இன­வா­தத்தை மாத்­தி­ரமே நம்­பி­யி­ருந்த பொது பல சேனா அமைப்­பினர் தற்­போது கேள்வி கேட்டு பதில்­களை பெற்றுக் கொள்ள முனை­கி­றது என்ற வகையில் அவர்­களின் கடி­தத்தை புறக்­க­ணிக்­காமல் கட்­டாயம் பதி­ல­ளிக்க வேண்டும்.

கடிதம் தெளி­வில்லை என்­பது முறை­யான பதில் அல்ல

பொது பல சேனா­வினால் ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு கடிதம் அனுப்­பப்­பட்ட செய்தி சமூக ஊட­கங்­களில் பரப்­பட்ட நேரத்தில் “குறித்த கடி­தத்­திற்கு நாம் பதி­ல­ளிப்போம்” என்று ஜம்­மிய்­யாவின் செய­லாளர் குறிப்­பிட்­ட­தாக செய்­திகள் இணை­ய­தள செய்தி ஊட­கங்­களில் பார்க்கக் கிடைத்­தது.

இதே நேரம் கடந்த 30.11.2016 அன்­றைய விடி­வெள்ளி பத்­தி­ரி­கையில் “பொது பல சேனாவின் கடிதம் யாருக்­கு­றி­யது என்று தெளி­வு­ப­டுத்­தப்­ப­டாமல் அனுப்­பப்­பட்­டுள்­ளது. தலை­வ­ருக்கா?, செய­லா­ள­ருக்கா? என்ற விபரம் அதில் இல்லை. ஆகவே அது தொடர்பில் நாம் பொது பல சேனா­விடம் விளக்கம் கோர இருக்­கிறோம்.” என்ற கருத்­துப்­பட ஜம்­மிய்­யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் அளித்த விளக்கம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

ஒரு கடி­தத்தை பொறுத்த வரையில் அது எந்த அமைப்­புக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனுப்­பப்­பட்­டதோ அந்த அமைப்பு குறித்த கடி­தத்­திற்கு பதில் வழங்க வேண்டும். தலை­வ­ருக்கா? செய­லா­ள­ருக்கா? என்­றில்லா விட்­டாலும் ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு என்று தெளி­வாக கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் போது அது உங்கள் அமைப்பின் காரி­யா­ல­யத்­திற்கே கிடைக்கப் பெற்­றி­ருக்கும் போது “கடிதம் தெளி­வில்லை விளக்கம் கோர இருக்­கிறோம்” என்­கிற பதில் பொருத்­த­மற்­ற­தாகும்.

கடி­தத்தில் கேட்க்­கப்­பட்­டுள்ள கேள்­வி­களில் தெளி­வின்மை இருப்பின் அது தொடர்பில் விளக்கம் கோர வேண்டும். தெளி­வில்­லாத கேள்­விக்கு முறை­யான பதில் அளிக்க முடி­யாது என்­ப­தினால் விளக்கம் கோரு­வது கட்­டா­ய­மாகி விடும். ஆனால் பொது பல சேனா­வினால் தற்­போது ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு அனுப்பப் பட்­டுள்ள கடி­தத்தை பொறுத்த வரையில் அதில் கேள்­வி­களில் தெளி­வில்­லாமல் இருக்­கி­றது என்று ஜம்­மிய்யா எங்கும் சொல்ல வில்லை. தலை­வ­ருக்கா? செய­லா­ள­ருக்கா? என்று குறிப்­பிட வில்லை என்று தான் உலமா சபையின் தலைவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

தலை­வ­ருக்கா? செய­லா­ள­ருக்கா? என்று குறிப்­பிட வேண்­டிய அவ­சியம் இல்லை. ஜம்­மிய்­யதுல் உல­மா­வுக்கு என்று தெளி­வாக குறிப்­பிட்­டுள்­ளார்கள். அத்­துடன் குறித்த கடிதம் உங்­க­ளுக்கு கிடைத்­து­மி­ருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கையில் அதற்கு பதி­ல­ளிக்­காமல் இருக்கும் வித­மான கார­னங்­களை ஊட­கங்­க­ளுக்கு தெரி­விப்­பது உரிய பதி­லாக இருக்­காது.

பொது பல சேனா­வினால் அகில இலங்கை ஜம்­மிய்­யதுல் உலமா சபைக்கு அனுப்­பப்­பட்­டுள்ள கடி­தத்தில் புனித அல்-­குர்ஆன் மற்றும் நபி­மொ­ழிகள் தொடர்பில் விளக்கம் கோரப்­பட்­டுள்­ளது. குறித்த கடிதம் உலமா சபைக்கு முக­வ­ரி­யிட்டு அனுப்­பப்­பட்­டாலும் அதன் உள்­ள­டக்கம் முஸ்­லிம்­களின் புனித குர்ஆன் தொடர்­பா­ன­தாகும். அதற்கு பதி­ல­ளிப்­பது ஜம்­மிய்­யாவின் மட்­டு­மல்ல அனைத்து முஸ்­லிம்­க­ளி­னதும் கட்­டாயக் கட­மை­யாகும்.

இதே நேரம், குறித்த கடி­தத்தில் பொது பல சேனாவின் தரப்­பி­லி­ருந்து கேட்க்­கப்­பட்­டுள்ள கேள்­விகள் பதி­ல­ளிக்க முடி­யாத கேள்­வி­க­ளு­மல்ல. முறை­யா­கவும் தெளி­வா­கவும் பதி­ல­ளிக்க முடி­யு­மான சாதா­ரண கேள்­விகள் தான்.மாத்­தி­ர­மன்றி, தற்­போது ஜம்­மிய்­யதுல் உலமா சபை­யிடம் பொது பல சேனா­வினால் கேட்க்­கப்­பட்­டுள்ள கேள்­வி­க­ளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொழும்பு சுக­த­தாச உள்­ள­ரங்­கத்தில் நாம் வெளி­யிட்ட அல்-­குர்ஆன் சிங்­கள மொழி பெயர்ப்­பி­லேயே பதில்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன என்­பதும் மேல­திக தக­வ­லாகும். மாற்று மத நண்­பர்கள் குர்­ஆனில் இருந்து எழுப்பும் சந்­தே­கங்­க­ளுக்கு உரிய பதில்­களை ஏற்­க­னவே நாங்கள் வெளி­யிட்ட குர்ஆன் சிங்­கள மொழி­யாக்­கத்தில் தெளி­வாக விளக்­கி­யி­ருக்­கிறோம்.

பொது பல சேனாவின் கடி­தத்­திற்கு உரிய பதிலை வழங்­கு­வ­தற்கு குர்ஆன் மற்றும் நபி­ய­வர்­களின் வழி­காட்டல் படி முழு­மை­யான அறிவு ரீதி­யி­லான மற்றும் மொழி ரீதி­யி­லான அனைத்து வித­மான ஒத்­து­ழைப்­பு­க­ளையும் ஜம்­மிய்­யதுல் உல­மா­வுக்கு தரு­வ­தற்கு தவ்ஹீத் ஜமாஅத் தயா­ரா­க­வுள்­ளது.

(கட்­டாயம்) தலைவர் உள்­ளிட்ட நிர்­வாக சபை­யி­னரை நேரில் சந்­திக்க விரும்­பு­கிறோம்

ஆகவே, குறித்த கடிதம் தொடர்பில் ஜம்­மிய்­யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி, செய­லாளர் முபாரக் மதனி உள்­ளிட்ட தலைமை நிர்­வாக சபை­யி­னரை நேரில் சந்­திந்து கலந்­து­ரை­யாடல் நடத்த தவ்ஹீத் ஜமாஅத் விரும்­பு­கி­றது.இக்­க­லந்­து­ரை­யாடல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் செய­லாளர் முபாரக் மதனி உள்­ளிட்­ட­வர்கள் கட்­டாயம் பங்­கு­பெற வேண்டும் என்­ப­துடன் வேறு நபர்­களை வைத்து பேசு­வ­தி­னூ­டாக முறை­யான ஒரு காரி­யத்தை பிர­யோ­ஜனம் அற்­ற­தாக ஆக்கி விட வேண்டாம் என்றும் அன்பாய் வேண்டிக் கொள்­கிறோம். 

கடி­தத்­திற்கு பதி­ல­ளிக்­காமல் புறக்­க­ணிப்­ப­தையே பதி­லாக்க வேண்டாம்

ஏற்­க­னவே பல தட­வைகள் சமு­தாயப் பிரச்­சி­னைகள் தொடர்பில் உலமா சபையின் தலைவர் உள்­ளிட்ட நிர்­வாக சபை­யி­னரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் சந்­திக்க முயற்­சித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கடிதம் அனுப்­பிய போதும் உலமா சபை­யினர் எம்மை சந்­திக்க நேரம் ஒதுக்க வில்லை. கடிதம் மூலம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அணு­கிய போதெல்லாம் பெரும்­பாலும் தலைவர் நாட்டில் இல்லை என்­கிற ஒரு பதில் எமக்கு வாய் வார்த்­தை­யாக தரப்­பட்­டது. தலைவர் வந்­த­வுடன் தொடர்பு கொள்வோம் என்று கூறப்­பட்­டது. ஆனால் இது­வரை ஒரு முறை கூட எமது கடி­தங்­க­ளுக்கு பதில் அளிக்­கப்­ப­டவும் இல்லை. சந்­திக்க நேரம் தரப்­ப­டவும் இல்லை என்­பதை இங்கு தெளி­வாக குறிப்­பிட விரும்­பு­கிறோம்.

இஸ்­லாத்தின் அடிப்­படை கொள்கை விஷ­யத்தில் தனித்­து­வ­மாக இஸ்­லாத்தை அதன் தூய வடிவில் எவ்­வித விட்டுக் கொடுப்­பு­மில்­லாமல் பிரச்­சாரம் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத், சமு­தாயப் பிரச்­சி­னை­களில் மற்ற அமைப்­பி­ன­ருடன் இணைந்து செயல்­ப­டு­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கி­றது. ஆனால் எம்மை வேண்­டு­மென்றே புரக்­க­ணித்து விட்டு “தவ்ஹீத் ஜமா­அத்­தினர் சமு­தாயப் பிரச்­சி­னை­களில் இணைந்து செயல்­ப­டு­வ­தில்லை” என்று குற்றம் சாட்­டு­வது ஏற்றுக் கொள்ள முடி­யாத ஒன்­றாகும்.

இறு­தி­யாக கடந்த 09.11.2016 அன்று ஜம்­மிய்­யதுல் உலமா சபை, தேசிய சூரா சபை, முஸ்லிம் கவுன்ஸில் உள்­ளிட்ட “முஸ்லிம் அமைப்­பு­களின் கூட்­ட­மைப்பு” உறுப்­பி­னர்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்­வா­கத்­துடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஷிராஸ் நூர்தீன் தலை­மையில் அவ­ரு­டைய வீட்டில் ஒரு சந்­திப்பை நடத்­தி­னார்கள். குறித்த சந்­திப்பில் சமு­தாயப் பிரச்­சி­னை­களில் தவ்ஹீத் ஜமாஅத் மற்ற அமைப்­பி­ன­ருடன் இணைந்து செயல்­பட தயா­ராக இருந்தும் ஜம்­மிய்­யதுல் உலமா சபை­யி­னரால் தெளி­வாக புரக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பது ஏக மன­தாக ஒப்புக் கொள்­ளப்­பட்­டது.

அதன் பின்­னரும் கூட இனிமேல் சமு­தாயப் பிரச்­சி­னை­களில் தவ்ஹீத் ஜமா­அத்தை இணைத்து செயல்­ப­டு­வது என்றும், தவ்ஹீத் ்தை இணைத்து செயல்படுவது என்றும், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடுவது இல்லை என்றும் தெளிவாக முடிவெடுத்து விட்டு 11.11.2016 அன்று எடுத்த முடிவுக்கு மாற்றமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இணைந்து செயல்படுவதற்கான இறுதி வாயிலையும் மூடியது ஜம்மிய்யதுல் உலமா உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் தான் என்பதையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.

குறிப்பு: நாம் பல முறை ஜம்மிய்யதுல் உலமா சபையை சந்திக்க உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் முயற்சித்தும் எமக்கு எவ்வித பதில்களும் உலமா சபை சார்பில் தரப்பட வில்லை. இந்த கடிதத்தையும் வழமை போல் பதிலளிக்காத கடிதமாக மாற்றி விட வேண்டாம். இதற்கு இன்றிலிருந்து (22.10.2016) எதிர்வரும் 02.01.2017 ம் திகதிக்கு முன் சுமார் 10 நாட்களுக்குள் உத்தியோகபூர்வமாக உரிய பதிலை எமக்கு அனுப்பி வைக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம் என்றும் அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டு­ள்­ள­து. விடிவெள்ளி

29 comments:

  1. SLTJ யின் இன்னொரு விளம்பர உத்தி.
    Or
    Dr ராஜித சேனாரத்ன சொன்னது உண்மையென்றால், இன்னொரு குழப்பத்துக்கு தூபமிடும் முயற்சி.
    And
    ACJU க்கு புதிய தலைவலியை உண்டாக்கும் திட்டம்.
    &
    தாம் சமீபத்தில் பூசிக்கொண்ட சேற்றை ACJU வின் மீதும் தோற்றி விட பிரயத்தனம்.

    ஷூரா கவுன்ஸிலில் சேர மாட்டேன் என்று அடம் பிடிக்காமல் அதில் அங்கத்துவம் வகித்திருந்தால் இந்த பிரச்சினை மட்டுமல்ல எல்லா issue களுக்கும் தமது கருத்துக்களை easy யாக முன் வைக்கலாமே.
    அத்தனை வழிகளையும் தாமே மூடி விட்டு இப்போது கடிதம் எழுதி என்ன பயன்.
    கடிதத்தின் contents ஐ உற்று நோக்கினால் ACJU விடம் நேரம் கேட்டு எழுதியதாக தோன்றவில்லை.
    மாறாக வழக்கம் போல் சுய தம்பட்டமும் ACJU வை வம்புக்கிழுக்கும் வசனங்களுமே காணப்படுகின்றன.
    கடிதம் ACJU க்கு முகவரியிடப்பட்டிருந்தாலும் ஊடக பிரச்சாரத்துக்கு எழுதப் பட்டிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. 100% சரியான கருத்து இந்த குழப்பவாதிகளின் ஆலோசனையை பெற்று பொது பல செனவுக்கு பதில் எழுதினால் ACJUயின் கதி அதோ கதி தான்

      Delete
  2. Islam not Monopoly of ACJU! Its part of Muslim community.
    and Mr.Rizvi moulavi is can't take monopoly rights as a life time leader! In our community having lot of Ullamas with qualified more then him!

    ReplyDelete
    Replies
    1. Hey, don't blame him, can you do the job

      Delete
    2. We cnt but definitely SLTJ Cn do it better than Acju

      Delete
  3. ACJU leader must respond to this letter. It is his absolute responsibility to clarify the facts to BBS.
    I'd like to ask what creative measures ACJU leader take to convey the immaculate Islam to non-Muslims??

    Alhamdhulillah! SLTJ has agreed to cooperate with ACJU. It's ACJU's responsibility to avail this opportunity and preserve the unity of Muslim ummah in our country.

    ReplyDelete
  4. ACJU leader must respond to this letter. It is his absolute responsibility to clarify the facts to BBS.
    I'd like to ask what creative measures ACJU leader take to convey the immaculate Islam to non-Muslims??

    Alhamdhulillah! SLTJ has agreed to cooperate with ACJU. It's ACJU's responsibility to avail this opportunity and preserve the unity of Muslim ummah in our country.

    ReplyDelete
  5. ACJU reply panna mattarhal

    ReplyDelete
  6. பல்வேறு கொள்கை உள்ளவர்கள் உலமா சபையில் இருக்கும் போது ஹதீஸ் மறுப்பு கொள்கை யில் இருக்கும் இவர்களை சேர்த்து சமூக சேவைகளை முன்னெடுப்பது தவறாக தெரியவில்லை
    இணைத்து செயல்படுவது மூலம் சில விடயங்களை கட்டுப்படுத்த வும் முடியும் ..

    ReplyDelete
  7. Don’t worry about fool SLTJ …………SLTJ means monkey :> Money- Key with BBS finally equal is SLTJ =BBS

    ReplyDelete
  8. Please get to getther as Muslims,do not be divided ,we are Muslims,do pray all mighty Allah,and following Muhammad(sal) give the Answer to BBS all jamaath get to getther for the pease of Sri Lankan Muslims,if not,there is a day of judgement on that day all will ask u ,, for ur eigo

    ReplyDelete
  9. Maashaaallah! Great news. Jazaakallahukhairan.shukran

    ReplyDelete
  10. BBS is an EXTREMIST Buddhist organization,officially
    rejected by Sinhala Buddhists in the last general
    election . That is well enough for us NOT TO ENGAGE
    with them in any dialogue of any importance under
    any circumstance ! Engaging with them will only help
    them get a recognition as an acceptable organization
    when there are other Buddhist sections fully accepted
    and venerated by the whole Buddhist general public.
    No diplomacy with BBS will work . And this questions
    and answers from BBS is never going to end . NO TIME
    SHOULD BE WASTED ON BBS . ALL RELIGIONS SHOULD WORK
    WITH THEIR FOLLOWERS WITHOUT CHALLENGING EACH OTHER'S
    BELIEFS, THUS RESPECTING EACH OTHER AND THAT IS THE
    ONLY WAY FORWARD . ALL RELIGIONS ARE BASED ON "BELIEF"
    AND NOT BASED ON "SCIENTIFIC REASONS." SO ,TO PROVE
    A POINT IN RELIGION , USING RATIONALE WILL NOT HELP
    BECAUSE ALL RELIGIONS ARE BEYOND RATIONALE .

    ReplyDelete
    Replies
    1. Islamic belief does not contradict any scientific fact.

      Delete
    2. Muzammil,
      What ludicrous are u talking??
      Do u follow Islam with pious or u support multi-religion concept??
      Keep in mind that exclusively Islam is the religion acknowledged by almighty Allah.

      Delete
    3. Muzammil,
      What ludicrous are u talking??
      Do u follow Islam with pious or u support multi-religion concept??
      Keep in mind that exclusively Islam is the religion acknowledged by almighty Allah.

      Delete
  11. Intha vidayaththil SLTJ I vimarsippavarhal maarkkaththil thelivupetrawarhalumalla ,samooha nalan virumbihalahavoo samooha nallinakkam penupavarhalahavoo vilanguvathaaha illai ithai avarhalin karuththukkalil irunthe vilanga mudiyumaaha ullathu

    ReplyDelete
  12. SLTJ far more capable than ACJU as they stick to correct bases of Islam..inshallah it's not too long to understand to Muslims in srilanka ..it's good if SLTJ is Muslims represents inshallah

    ReplyDelete
  13. 2 wahabihalum ondru sherndhal abasaranai

    ReplyDelete
  14. ஜம்மிய்யதுல் உலமாவைவிட SLTJ எந்த வழியில் சிறந்தது அல்லது உயர்ந்தது என்று யாருக்காவது கூற முடியுமா ஏனென்றால் இவர்கள் பின்பற்றுவது வழிகெட்ட பீ ஜே மதத்தை அதனால் தயவு செய்து முதலில் அதில் இருந்து தவ்பா செய்து இஸ்லாத்திற்கு வந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி பேசினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  15. ஜம்மியத்துல் உலமா விற்குள் , இல்மை
    சுமந்தவர்கள் தான் இருக்க வேண்டுமே
    தவிர , ஆலிமாக இருக்க வேண்டிய
    அவசியமில்லை என்று சொல்லி
    உம்மத்தை பிரித்த அறிவிலிகளுக்கு
    அங்கே தேவை இப்போது ?

    ReplyDelete
  16. ஒவ்வரு குழப்பத்திலும் தங்கள் உண்டுபண்ணிய பெரிய குழப்பங்களை வழமைபோன்று மைபூசி மறைக்க எத்தனிக்கின்றனர் இந்த ஸ்ரீலங்கா தௌஹீத் அமைப்பு.

    பெரியத்தனமாக நினைத்து நிறைய சின்னத்தன வேலைகளை செய்து முழு உம்மத்தையும் காயப்படுத்த எத்தனிக்கும், தங்களை தாங்களே அறிவாளிகள் என்று என்னும் இந்த அறிவிலிகள் கடிதம் என்ற பெயரில் தங்களை குற்றமற்றவர்களாக காண்பிக்கவே எத்தனிக்கின்றனர்.

    ஒரு முஹ்மின் கஞ்சனாக இருந்தாலும் நிச்சயமாக ஒரு பொய்யனாக இருக்கமாட்டான் என்று நபி(ஸல்) சொன்னதிருக்கிறது.

    ஆனால், இந்த ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தலைவர் உட்பட அடிமைகள் வரை எல்லோரும் பெரும் பொய்யர்கள் என்பதை பல்வேறு வீடியோக்களில் காணமுடிகிறது. இலங்கைக்கு பிஜே வந்துவிட்டதாகவும், அவரை மறைத்து வைத்திருப்பதாகவும் உத்தியோகபூர்வமாக போய் சொன்ன இந்த அமைப்பை அன்றே அல்லாஹ் இனம்காட்டிவிட்டான்.

    ஜம்இய்யத்துல் உலமாவைச்சேர்ந்த கண்ணிய மிக்க உலமாக்கள் இந்த தௌஹீத் ஜமாஅத் சார்பில் சரியாக நடந்துகொள்வார்கள் என எண்ணுகிறோம்.

    ReplyDelete
  17. Funny guys
    If they don't know the answer how cn they reply
    Mufthi says its not him and madhani also says its not to him...shame on url acju
    Well done SLTJ good thinking
    And better if url reply to the bbs letter

    ReplyDelete
  18. BBS & SLTJ இரண்டும் ஒரே மூலத்தில் இருந்து வந்திருந்தால்......
    இந்தக் கடிதத்தின் பிண்ணனி என்ன?

    ReplyDelete
  19. ACJUவுடன் சந்திப்பை ஏற்படுத்த சந்தா்ப்பத்தை வேண்டிக்கொள்ளும் உாிமை SLTJக்கு உள்ளது.
    ஆனாலும் SLTJ எழுத்திலும் பேச்சிலும் எவ்வாறு நிதானித்தும் முதிா்ச்சியுடனும் செயற்பட வேண்டும் என்பது பற்றி இன்னும் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

    ReplyDelete
  20. இயக்க வெறியையையும் முஸ்லிம்கள் அடித்துக்கொள்வதையும் கைவிட்டு அவன் கேட்கும் கேள்விகளுக்கு அறிவு பூர்வமான பதிலை வழங்கினால் அது அவனுக்கு அவனைச் சாரந்த மற்றும் அனுக்கு உள்ளால் சப்போட் பண்னும் பூச்சாண்டிகளுக்கு அடியாக அமையும் அல்லது உலமா சபை அதற்குக் கிடைத்த சரியான வாய்ப்பைப் பயன்படுத்தாதற்காக அல்லாh விடம் பதில் சொல்ல வேண்டிவரும் அதில் முஸ்லிமான மற்றும் முஸ்லிம்களின் நன்பர்களான யாரின் உதவியைப் பெற்றாலும் பறவாயில்லை இதில் கொள்கை வேண்டாம் சகோதரர்களே எதை நாம் சரியாக விளக்க நாம் பேச்சு மேடைகளை அமைத்து விளக்க முற்படுகின்றோமோ அந்த தூய மார்க்கத்தை அவனே முன்வந்து விளம்பரத்திற்காகக் கேட்கிறான் தயவுசெய்து உலமாசபையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சகோதர ஆலிம்கள் பார்ததால் இதை செயற்படுத்தி அவனுக்குப் பதில் கொடுங்கள் அவன் மேலும் கேள்விகள் கேட்பான் சிலநேரம் அவன் தெளிவு பெற்று நேர்வழியை நாடிவரவும் சந்தர்ப்பம் உண்டு
    அவனிடம் இருப்பது பொய்யான விளக்கங்கள் என்பது உங்களுக்கும் முழுமுஸ்லிம் சமுகத்திற்கு தெரியும் அதை முறியடித்து விளக்க வேண்டியது நமது கடமை நாமா அவனுக்கு விளக்கவில்லை அவன் கேட்கின்றான் நாங்கள் விளக்குகின்றோம் அவ்வளவுதான அதில் அத்துமீறல் எதுவும் இல்லை நாம் இதை இன்று விளக்காவிட்டா அவனாக முன்வந்து அனது கருத்துக்களை பதிவிட்டு ஏனை வசனங்களுக்கும் பிழையான அர்த்தம் கொடுத்து பிரச்சாரம் செய்வான் அப்போது எமது உம்மா குழம்பினால் பாரிய விளைவுகளை எதிர்நேக்க நேரிடும் எனவே இதை எமது சமுகமும் உலமாசபையும் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
  21. இயக்க வெறியையையும் முஸ்லிம்கள் அடித்துக்கொள்வதையும் கைவிட்டு அவன் கேட்கும் கேள்விகளுக்கு அறிவு பூர்வமான பதிலை வழங்கினால் அது அவனுக்கு அவனைச் சாரந்த மற்றும் அனுக்கு உள்ளால் சப்போட் பண்னும் பூச்சாண்டிகளுக்கு அடியாக அமையும் அல்லது உலமா சபை அதற்குக் கிடைத்த சரியான வாய்ப்பைப் பயன்படுத்தாதற்காக அல்லாh விடம் பதில் சொல்ல வேண்டிவரும் அதில் முஸ்லிமான மற்றும் முஸ்லிம்களின் நன்பர்களான யாரின் உதவியைப் பெற்றாலும் பறவாயில்லை இதில் கொள்கை வேண்டாம் சகோதரர்களே எதை நாம் சரியாக விளக்க நாம் பேச்சு மேடைகளை அமைத்து விளக்க முற்படுகின்றோமோ அந்த தூய மார்க்கத்தை அவனே முன்வந்து விளம்பரத்திற்காகக் கேட்கிறான் தயவுசெய்து உலமாசபையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சகோதர ஆலிம்கள் பார்ததால் இதை செயற்படுத்தி அவனுக்குப் பதில் கொடுங்கள் அவன் மேலும் கேள்விகள் கேட்பான் சிலநேரம் அவன் தெளிவு பெற்று நேர்வழியை நாடிவரவும் சந்தர்ப்பம் உண்டு
    அவனிடம் இருப்பது பொய்யான விளக்கங்கள் என்பது உங்களுக்கும் முழுமுஸ்லிம் சமுகத்திற்கு தெரியும் அதை முறியடித்து விளக்க வேண்டியது நமது கடமை நாமா அவனுக்கு விளக்கவில்லை அவன் கேட்கின்றான் நாங்கள் விளக்குகின்றோம் அவ்வளவுதான அதில் அத்துமீறல் எதுவும் இல்லை நாம் இதை இன்று விளக்காவிட்டா அவனாக முன்வந்து அனது கருத்துக்களை பதிவிட்டு ஏனை வசனங்களுக்கும் பிழையான அர்த்தம் கொடுத்து பிரச்சாரம் செய்வான் அப்போது எமது உம்மா குழம்பினால் பாரிய விளைவுகளை எதிர்நேக்க நேரிடும் எனவே இதை எமது சமுகமும் உலமாசபையும் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
  22. SLTJ,BBS போன்ற மூடர்களுடண் விவாதம் செய்யாமல் விலகிவிட வேண்டும் என்று அல் குர்ஆன் எமக்கு அறிவுருத்துகிறது அதனால் இவர்கள் போண்ற விஷ கிருமிகளின் வலையில் விலாமல் ஒதுங்கி முஸ்லிம்களை பாதுகாக்க அனைவரும் முயற்ச்சிக்க வேண்டும் முடியுமானால் சிங்கள நாயக்க தேரர்கள் புத்தி ஜீவிகள் ஊடாக நமது விளக்கங்களை முன்வைக்க முயற்சிக்களாம்

    ReplyDelete

Powered by Blogger.