இலங்கையில் 8 இலட்சம் ரூபாவில், கார் வாங்கலாம்..!
இலங்கையர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்சார மோட்டார் வாகனம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 8 இலட்சம் ரூபா விலைக்கு சந்தைக்கு வரவுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனம் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் நான்கு பேர் சொகுசாக பயணிக்க கூடிய இந்த புதிய மோட்டார் வாகனம், தற்போதைய வணிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் வடிவமைப்பு, பொறியியல் தொழில்நுட்பவியலாளர் கே.பீ.கபில டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஒரு முறை இந்த மோட்டார் வாகனத்தின் பெட்டரியை சார்ஜ் செய்ததன் பின்னர் 100 கிலோமீற்றர் வரை பயணிக்க முடியும். அதற்காக 350 ரூபாய் என்ற குறைந்த அளவிலான பணமே செலவிடப்படுகின்றது. அத்துடன் மின்சார பெட்டரி வீட்டில் உள்ள மின்சக்தி ஊடாக சார்ஜ் செய்யவும் முடியும்.
இந்த நாட்டின் சுற்றாடலை பாதுகாப்பதற்காக மோட்டர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக கபில தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த மோட்டார் வாகனத்தை தயாரிப்பதற்கு கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆய்வில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கபிலவினால் தயாரிக்கப்பட்ட கோல்ப் மின்சார மோட்டார் வாகனம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி 10 இலட்சம் ரூபா பெறுமதியில் சந்தைக்கு கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளபடுகின்றது.
புதிய மின்சார மோட்டார் வாகனம் 4 அடி அகலம் மற்றும் 7 அடி நீளத்தை கொண்டுள்ளது. இது குளிரூட்டப்பட்டுள்ளதுடன், நவீன வாகனங்களில் உள்ள அனைத்து விடயங்களும் இந்த புதிய மோட்டார் வாகனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இது உண்மையாகவே முச்சக்கர வண்டிக்கு மாற்றமாகவும், முச்சக்கர வண்டியை விடவும் மிகவும் குறைந்த செலவில் மக்கள் பயணிக்க கூடிய வசதியை, இந்த மின்சார மோட்டார் வாகனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சினால் உதவி வழங்கினால் 6 இலட்சம் ரூபாவுக்கு இந்த மின்சார மோட்டார் வாகனத்தை உற்பத்தி செய்ய முடியும் என கபில தெரிவித்துள்ளார்.
இந்த மோட்டார் வாகனத்தின் கன்வேட்டர் மற்றும் பெட்டரி மாத்திரமே வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்துள்ளதாகவும் ஏனைய 60 வீதமான வளங்கள் இலங்கை தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
GOOD EFFORT.JAYAWEWA MR KAPILA
ReplyDeleteCongratulations. Carryon.
ReplyDeleteThanks.mr.Kafila.we proud of u because we srilankan.congratulation .
ReplyDeleteCongratulation mr kapila we proud of you
ReplyDelete