Header Ads



அமெரிக்காவுடன், ஈரான் மிகப்பெரிய ஒப்பந்தம் - 80 விமானங்களை வாங்குகிறது

ஈரானின் தேசிய விமான நிறுவனமனாது போயிங் நிறுவனத்துடன் 80 விமானங்களை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு புரட்சிக்கு பிறகு ஓர் அமெரிக்க நிறுவனத்துடன் ஈரான் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.

பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த ஒப்பந்தம் மூலம் 50 போயிங் 737 விமானங்களும், 30 போயிங் 777 விமானங்களும் வாங்கப்பட உள்ளன.

பல தசாப்தங்களாக ஈரான் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டிருந்ததால் அந்நாட்டின் பழைய விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்துள்ளன.

கடந்தாண்டு ஒப்பந்தத்தின்படி பொருளாதாரத் தடைகளிலிருந்து நிவாரணம் பெற அணுஆயுத திட்டங்களின் ஒரு பகுதியை ஈரான் கைவிட ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்தார்.

டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பதற்குமுன் இந்த விமான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக ஞெயல்படுத்த ஈரான் விரும்புவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. ஈரான் போடும் இரட்டை வேடம். அமெரிக்காவுடன் உறவு வைப்பது இஸ்லாமிய விழுமியங்களுக்கே எதிரானது என்று பேசிய ஈரான் இன்று இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்காவுடன் தொடர்பு வைக்கும் முஸ்லிம்களை யூதர்களுக்கு ஒப்பிடும் ஷீஆக்களுக்கு இப்போது அமெரிக்கா உற்ற நண்பனாக மாறிவிட்டது.
    ஏனெனில் ஷீஆக்களின் அடிப்படையே யூதக்கொள்கையே. "இனம் இனத்தைச் சாரும்"

    ReplyDelete
  2. இவ் இருநாடுகளும் புகையிரதப்பாதையின் தண்டவாளங்களைப் போன்று ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கின்றன. அவை ஒன்றைஒன்று சந்திப்பதில்லை. மாறாக இஸ்லாமிய சாம்ராஜ்யம் மீண்டும் தோற்றம்பெறுவதை தடுத்து முஸ்லிம் உம்மத்தை சீரழிப்பதை நோக்காக கொண்டு ஒரே பாதையில் பயணிக்கின்றன.
    இஸ்லாத்தை எம்மால் அழிக்க முடியாது என்பதை உள்ளூர உணர்ந்தாலும் தமது வறட்டுத்தனத்தால் சில நாடுகளை சிதைத்து வருகின்றன.
    இன்ஷாஅள்ளாஹ் இறை நாட்டத்தின் பிரகாரம் இன்னும் 25ஆண்டிகளின் பின்னர் பிரசுரமாகும் வரலாற்றுப் பாடஙாலில் அண்மையில் சிதைந்த இருபெரும் தேசங்கள் என்றநாடுகளின் பட்டியலை எம் எதிர்கால சந்ததிகள் வாசிப்புச்செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.