Header Ads



ஜனவரி 8 முதல்14 வரை தேசிய நல்லிணக்க வாரம்

இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பும் நோக்கில் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்­வொரு வரு­டமும் ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை­யான வாரத்தை ‘தேசிய ஒரு­மைப்­பாட்டு மற்றும் நல்­லி­ணக்க வார­மாக’ பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

அத்­துடன் 2017 ஆம் ஆண்டில் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள குறித்த வாரத்­துடன் இணைந்­த­தாக நாடு தழு­விய ரீதியில் அனைத்து பாட­சா­லைகள், ஊட­கங்கள், அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களை மைய­மாகக் கொண்டு தேசிய ஒரு­மைப்­பாட்டின் முக்­கி­யத்­து­வத்தை வெளிப்­ப­டுத்­து­கின்ற பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கும்  தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.  

தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சர் எனும் ரீதியில்   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு  அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.