ஜனவரி 7 போராட்டத்திற்கு, ஞானசாரர் அழைப்பு
நாட்டின் தலைவர்கள் பௌத்தர்கள் அல்லது சிங்களவர்கள் அல்லாதவர்களின் ஆலோசனை க்கு அமைய செயற்படுவதாக பொதுபல பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல பொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய யாப்பு ஒன்றிற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
“தற்போது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்யும் அதேவேளை நாட்டின் வளத்தை வெளிநாடுகளுக்கு விற்ப னை செய்வதற்கு எதிராக நாம் ஒரு வேலைத்திட்டத்தை உடனடியாக செய்யவேண்டிய அவ சியம் ஏற்பட்டுள்ளது.
சிவில்அமைப்புகள்,பௌத்தர்கள் சிங்களவர்கள் அல்லாதவர்களின் ஆலோசனைக்கு அமைய செயற்படும் இந்த தலைவர்களினால் யாப்பின் ஊடாக ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமாயின் அதற்கு எதிராக ஒப்பந்தங்கள் எதுவுமின்றி எவரோடு வேண்டுமானாலும் இணைந்து அதனை தோற்கடிக்க நாம் தயார்.
பேஸ்புக்கின் ஊடாக நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கும் நாட்டை யாப்பின் ஊடாக பிரிப்பதற்கும் எதிராக போராட வேண்டும். ஆகவே ஜனவரி 7ஆம் திகதி அனைவரும் நுகேகொடையில் ஒன்றிணையுமாறு வேண்டுகிறோம்“ எனத் தெரிவித்துள்ளார்.
Honorned thero,
ReplyDeletePls dnt try to divide the country again
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
ReplyDelete(அல்குர்ஆன் : 2:258)
மத நிந்தனையற்ற நாட்டிற்குத்தேவயான செயெற்பாடுகளை வரவேற்கின்றோம்...
ReplyDelete