Header Ads



எனது 7 குழந்தைகளையும் மியான்மார் இராணுவம் கொன்றது - முஸ்லிம் சகோதரியின் கதறல்

மியான்மார் - ரோஹிங்கியாவில் முஸ்லிமாகப் பிறந்த நூர் ஆயிஷா தனது கடைசி ஒரு மகளுடன் படகு வழியாக வந்து வங்க தேசத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மியான்மார் இராணுவம் அவரது கிராமத்திற்குள் வந்த சம்பவத்தை விபரிக்கையில், “இருபதுக்கும் அதிகமான இராணுவத்தினர் எங்களது வீட்டிற்கு முன்னால் வந்து அனைவரையும் வீட்டு முற்றத்திற்கு வரச் சொல்லி உத்தரவிட்டனர்.

எனது ஐந்து குழந்தைகளை ஒரு அறையில் தள்ளி தாழ்ப்பாளிட்டனர். அந்த அறையை குண்டால் வெடிக்கச் செய்து என்னுடைய ஐந்து குழந்தைகளையும் உயிரோடு எரித்துவிட்டனர். எனது இரண்டு பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின் கொல்லப்பட்டனர்.

எனது கணவனை கொன்றதுடன் என்னையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர். எனது ஐந்து வயது குழந்தை அருகிலிருந்த வீட்டில் மறைந்திருந்ததால் அவள் மட்டும் காப்பாற்றப்பட்டாள் எனக் கூறினாள்.

இந்த சம்பவம் பர்மாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ரக்ஹைன் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. குறித்த பெண் அம்மாநிலத்தில் உள்ள கியெட் யோ பியன் பகுதியைச் சேர்ந்தவர்.

மியான்மாரை ராணுவ ஆட்சியிலிருந்து மீட்டவராக பார்க்கப்படும் ஆங் சென் சூகி தற்போதைய அரசாங்கத்தில் வெளி விவகாரத்துறை அமைச்சராக இருக்கும் நிலையிலும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் ராணுவ வன்முறைகளைக் கண்டு கொள்ளாதவராக செயல்பட்டு வருகிறார்.

“ரோஹிங்கா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறையால் ஆங் சென் சூகியின் நோபல் பரிசை திரும்ப பெற வேண்டும்” என்ற குரல்களும் வலுத்திருக்கின்றன.

4 comments:

  1. யாஅல்லாஹ் இம்மக்களுக்கும் அனீதியை எதிர்க்கும் சக்தியை கொடுப்பாயாக...

    ReplyDelete
  2. நிச்சயம் அவசரமாக ஒரு விடிவு வர பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  3. யா அல்லாஹ் உலகில் எங்கு எல்லாம் முஸ்லிம்களுக்கு அநீதி நடக்கின்றதோ,அதை அவர்களுக்கே சாட்டி ஒவ்வொரு முஸ்லிமையும் ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக .ஆமீன்

    ReplyDelete
  4. கிட்டிய தூரத்தில் விடிவு வரும் தாயே! இன்ஷாஅள்ளாஹ். ஒவ்வொரு தொழுகையிலும் குறிப்பாக தஹஜ்ஜத்திலும் துஆ கேட்போம்.

    ReplyDelete

Powered by Blogger.