எனது அரசாங்கத்தை மாற்ற, அமெரிக்கா 648 மில்லியன் டொலர்களை செலவிட்டது - மஹிந்த
இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகளை கண்டு இந்தியா மௌனமாக இருப்பதற்கான காரணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்
சீனாவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை வழங்கும் இலங்கை அரசாங்கம், திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை இந்தியாவுக்கு வழங்கவுள்ளமையே இதற்கான காரணம் என்று மஹிந்த குறிப்பிட்டுள்ளார்
இலங்கையில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முன்னர், சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்கு வந்தபோது இந்தியா தமது அதிருப்தியை வெளியிட்டது.
எனவே அமரிக்காவுடன் இணைந்து தமது ஆட்சியை கவிழ்க்க உதவியது. எனினும் நடைமுறை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அது மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கிறது என்று மஹிந்த சுட்டிக்காட்டிள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் இணைந்து சீனாவின் திட்டங்களுக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.
எனினும் அதே இருவரும் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
இதனை தவிர 15ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தையும் வழங்க முன்வந்துள்ளனர். இதேவேளை, தமது அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்காவும் தமிழ் புலம்பெயர்வாளர்களுமே முன்னின்று உழைத்தனர்
இந்தியா அதற்கு உறுதுணையாக இருந்தது. முன்னைய அரசாங்கத்தை மாற்றியமைக்க 648 மில்லியன் டொலர்களை செலவிடப்பட்டதாக அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment