பாராளுமன்றத்திற்கு வரவுள்ள, புதிய 5 முகங்கள்
நாடாளுமன்றத்திற்கு அடுத்த வருடம் 5 புதிய முகங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கவனம் செலுத்தி வருவதாக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மூன்று தேசிய பட்டியல் உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த இரண்டு தேசிய பட்டியல் உறுப்பினர்களையும் நீக்கி விட்டு சிவில் அமைப்புகளில் அங்கம் வகிக்கும் துறைசார் அறிவுடன் கூடிய முக்கிய செயற்பாட்டாளர்கள் 5 பேரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தர்மசிறி பண்டாரநாயக்கவின் பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் கலாச்சாரம் மற்றும் கலைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ள சுதந்திரக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பிரபல எழுத்தாளரான காமினி வியங்கொட, தொழிற்சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளரான சமன் ரத்னபிரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த தேசிய பட்டியல் நியமனங்களின் பின்னர் சில அமைச்சு பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்படும் என தெரியவருகிறது.
U got ths news frm suthanda newspaper. If not it will b haram
ReplyDelete