Header Ads



கொழும்பு அமெரிக்க தூதரகம் 5.7 ஏக்கரில் விரிவாக்கப்படுகிறது, படைகள் தங்கவும் ஏற்பாடு


சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் புதிதாக 5.7 ஏக்கர் நிலத்தில் விரிவாக கட்டப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று அமெரிக்கத் தூதரக வளாகத்தில் இடம்பெற்றது.

தற்போதுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஒட்டியதாக வாங்கப்பட்ட காணியை உள்ளடக்கியதாக பாரிய தூதரக கட்டடத் தொகுதியை அமெரிக்கா அமைக்கவுள்ளது.

வொசிங்டனில் இருந்து வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கடல்கடந்த நிர்மாண செயற்பாடுகள் பிரிவின் முதன்மைப் பிரதிப்பணிப்பாளர் வில்லியம் மோசர் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும் அதிகாரிகள் நேற்று நடந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றனர்.

தற்போதுள்ள கட்டடத்தொகுதியை உள்ளடக்கியதாக, புதிதாக அமைக்கப்படவுள்ள தூதரக வளாகம், தூதரகப் பணியகம், மரைன் காவல்படைக்கான வதிவிடம், உதவி கட்டடங்கள், மற்றும் தூதுரக சமூகத்துக்கான வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய தூதரக வளாகம், தூதரகப் பணியாளர்களின் பாதுகாப்பான, நிலையான, உறுதித்தன்மையான, நவீன பணியிடமாக இருக்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வொசிங்டனில் உள்ள நிறுவனம் ஒன்றினால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தூதரக வளாகத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றே மேற்கொள்ளவுள்ளது.


10 comments:

  1. Replies
    1. It's good for supplying weapons to SL army & LTTE from the source of terrorism's country. So, SL army Will kill Ajanta Antony raj's race & vice versa.

      Delete
  2. இனி நாடு வெலங்கும்...

    ReplyDelete
  3. மிக விரைவில் இலங்கை மக்ளுக்கிடையில் விசாலமான ஆயுத போராட்டத்தை எதிர்பாருங்கள் இந்த அமெரிக்கன் ஏனைய நாடுகளுக்குல் நுளைந்து அவர்களின் செல்வங்களை சூரையாடிய பின்பு அம்மக்களுக்கிடையில் எந்த வகையில் பிரச்சினைகளவ உண்டுபன்ன முடியும் என்று கவனித்து அதை செய்வார்கள் பின்பு அவர்களின் ஆயுதங்களை அம்மக்களுக்கு விற்பார்கள் இவன்தான் அமெரிக்கன்! இலங்கை மக்களே கிளர்ந்தெழுங்கள்.வெள்ளம் வரும்முன் அனைக்கட்டுங்கள்,ரசியா,சீனா, இந்தியா, பாகிஸ்தான்,ஈரான்,ஏனைய இப்பிராந்திய நாடுகள் ஒன்று சேர்வதை தடுப்பதற்கு இது அமெரிக்கர்களின் துப்பறிவு கேந்திர நிலையமாகும்.

    ReplyDelete
  4. படத்தில் உள்ளவர்கள் அனைவரும் CIA உளவாளிகள்போல் தெரிகிறது.

    இந்த சிறு நிலத்தில் மண்ணைத் தோண்டும் இவர்கள், பின்னாளில் இலங்கை முழுவதையும் நிச்சயம் தோண்டுவார்கள்.

    இதன்பிறகு, இலங்கைக்கு எதிராக என்னதான் மனுக்களை ஐ.நாவிடம் கொண்டு சென்றாலும், அமேரிக்கா திரும்பிப் பார்க்காது.

    இனப்பிரச்சனையாவது, மண்ணாங்கட்டியாவது.

    ReplyDelete
  5. This is not an embassy. If it is an embassy, why they should allocate the stay place to their marine forces?

    ReplyDelete
  6. இலங்கையில் உள்ள பல்கலைகழகங்களாவது இந்த நில பரப்பின் அளவில் உள்ளதா? ஏன் தூதரகதிற்கு இவ்வளவு நில பரப்பு எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவுக்கு சார்பான நயவஞ்சக இலங்கையர்களை அமெரிக்க இந்த இடத்தில்தான் பாதுகாக்க திட்டமிட்டுள்ளார்கள் மேலும் அவர்களின் படையினரின் துப்பறிவாளர்களையும் இங்கே வாழவைப்பார்கள் காரணம் இராஜ தந்திர முறையின் அடிப்படை இலங்கை நாட்டில் உள்ள பிறநாட்டு தூதரகங்களில் இலங்கையின் பாதுகாப்பு படையால் அங்கு நுளைந்து யாரையும் கைது செய்ய முடியாது எதையும் சோதனை செய்யவும் முடியாது.

    ReplyDelete
  7. started the game. Hasbunallahu wanimal wakeel

    ReplyDelete
  8. ரம்பின் ஆட்சியில் இவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது

    ReplyDelete

Powered by Blogger.