சித்தரவதை செய்வதற்கு 52 சதவிகிதம் பேர் ஆதரவு
சித்தரவதை தொடர்பான மனநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவின் ஒரு பெரிய கருத்துக்கணிப்பு கூறுகிறது.
செஞ்சிலுவை சங்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் சித்தரவதை செய்வதற்கு 52 சதவிகிதம் பேர் ஆதரவு
எதிரி போராளிகளிடமிருந்து தகவல்களை பெறுவதற்கு அவர்களை சித்ரவதை செய்யலாம் என்று நிறைய பேர் இந்த ஆய்வில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வானது உலகம் முழுக்க 16 நாடுகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெறும் 48 சதவிகிதம் பேர் சித்ரவதை செய்வது தவறு என்று தெரிவித்துள்ளனர். ஆனால், 1999 ஆம் ஆண்டில் இது 66 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எந்த சூழ்நிலையிலும் சித்ரவதை செய்வது என்பது சட்ட விரோதமானது என்றும், அவ்வாறு சித்ரவதை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment