இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் - ஜெனீவாவில் 50 பக்க ஆவணங்களை ஒப்படைத்த ஆசாத் சாலி
நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான 50 பக்க விரிவான ஆவணமொன்றை ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசாத் சாலி கையளித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (19) ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இந்த ஆவணங்களை கையளித்ததாக ஆசாத் சாலி கூறினார்.
இந்த ஆவணத்தில் கடந்த 2 வருடங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், நடைபெற்ற திகதிகள், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் பற்றிய விளக்கங்கள் மற்றும் அதுதொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளும் ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆசாத் சாலியிடமிருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள், தாம் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து நிறை எதிர்பார்த்ததாகவுவும் ஆனால் அவை நடைபெறவில்லை எனவும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் இதுபற்றி விசேட கவனம் செலுத்தப்படுமெனவும், நல்லாட்சி என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை அனுமதிக்க முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment