50 வருடங்களில், பதுளை அழிந்துவிடும் - மாவட்ட அரச அதிபர்
பதுளை மாவட்டத்தில் நடக்கும் சுற்றுச் சூழல் அழிவு காரணமாக இன்றும் 50 வருடங்கள் மாத்திரமே பதுளை மாவட்டம் இருக்கும் என புவிசரிதவியல் ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருவதாக பதுளை மாவட்ட அரச அதிபர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் எதிர்காலத்தில் மிகப் பெரிய சுற்றுச் சூழல் அழிவு ஏற்படும் எனவும் அதனை எதிர்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்குவதற்காக பதுளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அபேசிறி இதனை குறிப்பிட்டுள்ளார்.
பதுளை உட்பட மத்திய மலையக பகுதிகளில் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாக அங்கு அடிக்கடி மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால், கனமழை பெய்யும் காலங்களில் அனர்த்தங்கள் ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment