Header Ads



3 அமைச்சர்கள் நீக்கப்படுவார்களா..?

ராஜபக்ஸர்களின் ஊழல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அமைச்சர்களை இனங்காணும் நோக்கில் நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது ராஜபக்ஸர்கள் மற்றும் அவர்களின் அடியாட்களுக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அமைச்சர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபஸ மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை சேர் என அழைப்பார் என த சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அதன்போது தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட ஆரம்பத்தில் ஏற்படவுள்ள அமைச்சரவை திருத்தத்தில் நிச்சயமாக குறித்த மூன்று அமைச்சர்களையும் அவர்களின் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வருவதாக இந்த சந்திப்பின்போது தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியில் இணையவுள்ள முதலாவது அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ என அரச புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

2 comments:

  1. பலவீனமானவர்கள் எப்போதும் மற்றவர்களில் தங்கியிருப்பதைக் காணலாம். அதிலும் பேராசைக்கார பலவீனர் தமக்குத் தாமே தலையில் மண்ணைவாரி இறைத்துக்கொள்வதுமுண்டு. இது அரசியலில் அடிக்கடி நிகழ்வதுமுண்டு. MR இதற்கு நல்ல உதாரணமாகும்.
    நீதிக்கானவர் ஓர் இனவாதி என்பதை அடிக்கடி நிருபித்துவருவது தானும் MR குழுமத்தற்குரியவர் எனபதையே காட்டுகின்றது. அவ்வாறே பொலிஸிக்குப் பொறுப்பானவர் தனது தகுதி என்ன என்பதை அடிக்கடி நிருபர்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி அவஸத்தைப்படுவதையும் காணலாம். ஆனால் உள்ளூருக்குப் பொறுப்பானவர் நீருக்குள்ளால் நெருப்பை நகர்த்துகன்றார்போலும்.
    எனவே இம்மூவரையும் வெளியில் போடவேண்டும்தான். ஆனால் கூட்டணைந்து நடத்தப்படும் ஆட்சியை வீழ்த்துவதற்கு ஓநாய்க் கூட்டம் நாக்கை வெளியே போட்டுக்கொண்டு அலைந்து திரிகின்றது.
    எனவே மிக கவனமாக காய்நகர்த்தி அவர்கள் தொடர்பான பைல்களை தயார்படுத்தி வைத்துவிட்டே காரியமாற்ற வேண்டும். அரசியலில் தந்திரியான பிரதமருக்கு இதை நான் குறிப்பிடுவது மீன் குஞ்சிக்கு நீந்தக் கற்றுக்கொடுப்பது போன்றதாக அமைந்துவிடும்.
    ஆனாலும் அரசியலில் இதுவெல்லாம் சகஜம் தான் என்ற நிலையும் உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.