340 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சர்வாதிகாரி
வடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ’கிம் ஜோங்-யுன்’ பதவியேற்று ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சர்வாதிகாரியான கிம், கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர் போனவர். கிம்மின் 5 வருட ஆட்சி காலத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார் என தென் கொரிய தேசிய பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியாவில் 2011-ம் ஆண்டிலிருந்து 340 பேருக்கு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் 140 பேர் மூத்த அரசாங்க அதிகாரிகள். அதிலும் ஒருவர் அரசு கூட்டத்தின்போது தூங்கியதற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் ஆபத்தான மனிதர் என்று கிம் ஜோங்-யுன்னுக்கு பட்டப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Post a Comment