Header Ads



30 ஆம் திகதி, தேசிய துக்க தினமாக பிரகடனம்

எதிர்வரும் 30 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்விவகார அலுவல்கள் மற்றும் அரச நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலயில், அன்றைய தினம் துக்க தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் புது வருட கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தொடர்பில் கருத்திற்கொண்டு குறித்த தினத்தை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, அன்னாருடைய இறுதிக் கிரியைகள் ஹொரணை விளையாட்டு மைதானத்தில் பூரண அரச அனுசரனையுடன் இடம்பெறும் என்றும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடல் இன்று பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரம், இன்று காலை 10.30 தொடக்கம் 11.30 வரை, மறைந்த மூத்த அரசியல்வாதியான ரட்ணசிறி விக்ரமநாயகவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கருஜெயசூரிய தெரியப்படுத்தியுள்ளார்.

ரட்ணசிறி விக்ரமநாயக்க  2000 -2001 ஆண்டு மற்றும் 2005 - 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.