2 பாவிகள் கைது
பிரேசிலில் கர்ப்பிணி பெண்ணை ஏமாற்றி கடத்தி சென்று வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய தம்பதியை பொலிசார் கைது செய்தனர்.
ரியோடி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம் பெண் தைநடா சில்வா, மற்றும் அவருடைய கணவர் பேபியோ லூயிஸ் இருவரும் குழந்தைகளுக்கு ஆடை அன்பளிப்பு செய்வதாகக் கூறியே கர்ப்பிணிப் பெண்ணான ரயானி கிறிஸ்டினி (22) என்பவரை வீட்டுக்கு வரவழைத்துள்ளனர்.
இவ்வாறு வந்த அந்த பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்தபோதும் ஏழரை மாதமான அந்த சிசு இறந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அடுத்து தாயையும் அவர்கள் கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு வாரங்களாக காணாமல் போயிருந்த ரயானி கிறிஸ்டினியை தேடியபோதே அவரது கருகிய உடல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு கொலையில் ஈடுபட்ட தம்பதியரின் வீட்டு தோட்டத்தில் இருந்து சிசுவின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
தைநடா சில்வாவின் கர்ப்பப்பையில் கோளாறு இருப்பதால் குழந்தை பெற முடியாத நிலையிலேயே அந்த தம்பதி இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
Post a Comment