2 ஆம் திகதி, மீண்டும் கூடுவோம் - ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பது பற்றி தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிக்கப்போவ தில்லை. அவ்வாறு அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக் குழு கோரவுமில்லை. எனினும் கட்சியின் செயலாளர் நாயகம் தொடர்பில் சில தெளிவுகளையே ஆணைக்குழு கட்சியிடம் கோரியுள்ளது. எனவே அது தொடர்பில் ஆணைக்குழுவை இன்று தெளிவுபடுத்தவுள்ளளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக்கூட்டம் நேற்று மாலை 6.15 முதல் இரவு 9.45 மணி வரை கட்சியின் உயர்பீடமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் விடயம் தொடர்பில் காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் அதன்போது இடம்பெற்றன. இருந்தபோதிலும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை. உயர்பீடக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலியை இன்று சந்திப்பதற்கு நான் தயாராக உள்ளேன். எனவே அவர் என்னைச் சந்தித்து செயலாளர் விடயம் தொடர்பில் கலந்தாலோசிக்கலாம். அவருடனான சந்திப்பின் பின்னரே அவர் சம்பந்தமான விடயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியம். எனினும் கடந்த பேராளர் மாநாட்டின்போது கொண்டு வரப்பட்ட யாப்பு திருத்தத்தின் மூலமே உயர்பீடச் செயலாளர் அறிமுக்கப்படுத்தப்பட்டார். ஆகவே அப்போது கொண்டு வரப்பட்ட யாப்புத் திருத்தம் உரிய முறையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக உயர் பீடக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே செயலாளர் விடயத்தில் மாற்றம் எதனையும் கொண்டு வருவதாயின் அது பேராளர் மாநாட்டிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். யாப்புத் திருத்தத்தின் மூலமே அதனை கொண்டுவர வேண்டியள்ளது.
எனவே கட்சியின் யாப்புக்கு இணங்க தீர்வுகளை ஆராய்வதற்கு கட்சி தயார். ஆகவே கட்சியின் உச்சபீடம் எதிர்வரும் இரண்டாம் திகதி கூடி திருத்தங்கள் தொடர்பிலும் பேராளர் மாநாடு தொடர்பிலும் ஆராயவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அல்லாஹ்வுக்காக ஒற்றுமைப்படுவோம்.
ReplyDeleteThe community is suffering because of these Muslim Political Parties.
ReplyDeleteThese so called Muslim Political Parties and the "Muslim" politicians have become the curse.
May Allah save Sri Lankan Muslims from these selfish, callous politicians.
உலகம் எல்லாம் முஸ்லிம்களை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் இங்கே பதவிச் சண்டை ,இன்றைய நிலையில் முஸ்லிம் உலகம் சிரியாவில் நம் சகோதரரர்கள் பச்சை பச்சையாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதை நினைத்து அழுது கொண்டுஇருக்கும் இவ்வேளையில் இந்த ஜாஹில்கள் பதவிச் சண்டை பிடிக்கிறார்கள்,கட்டார்நாட்டிலும் 18 ம் திகதி இருக்கும் சுதந்திர தின விழா அலைத்தையும் அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது ஒலோப்போ முஸ்லிம்களுக்காக ஆனால் இவார்கள் பதவி மோகத்தி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைகிறார்கள்,ஜப்னா முஸ்லிம் இந்த துக்கரமான நிலையில் இவர்களின் பதவி பெருமை சண்டை செய்தியை ஒல்லாஹ்வுக்காக போடாதீர்கள்,முஸ்லிம் உம்மத் கண்ணீர் வாடிக்கிறது.
ReplyDeleteஉலகம் எல்லாம் முஸ்லிம்களை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் இங்கே பதவிச் சண்டை ,இன்றைய நிலையில் முஸ்லிம் உலகம் சிரியாவில் நம் சகோதரரர்கள் பச்சை பச்சையாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதை நினைத்து அழுது கொண்டுஇருக்கும் இவ்வேளையில் இந்த ஜாஹில்கள் பதவிச் சண்டை பிடிக்கிறார்கள்,கட்டார்நாட்டிலும் 18 ம் திகதி இருக்கும் சுதந்திர தின விழா அலைத்தையும் அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது ஒலோப்போ முஸ்லிம்களுக்காக ஆனால் இவார்கள் பதவி மோகத்தி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைகிறார்கள்,ஜப்னா முஸ்லிம் இந்த துக்கரமான நிலையில் இவர்களின் பதவி பெருமை சண்டை செய்தியை ஒல்லாஹ்வுக்காக போடாதீர்கள்,முஸ்லிம் உம்மத் கண்ணீர் வாடிக்கிறது.
ReplyDelete“ஊர் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்!
ReplyDeleteசமூகம் பற்றி எரிகிறது... இந்த மன்னனுக்கு கட்சியை தக்கவவைக்க... அதாவது "எரிகிற வீட்டில் கிடைப்பதை பிடிங்கிக்கொள்ள" வியூகம்" வகுக்கிறார்... தனது அரண்மனைக்குள்ளிருந்து....!
One of the senior member mr hassn ali.please consider this matter very seriously dear RHakeem.may allah bless
ReplyDeletePls unite as a team.... or else there are plenty of people waiying to kick us off...
ReplyDeleteஇக்கட்சி இருந்தால் என்ன? அழிந்தால் என்ன?
ReplyDeleteஅவன் அவன் வயிறுவளர்ப்பதற்கும் சன்டையிட்டுக்கொள்வதற்கும் ஒரு கட்சி தேவையா? பிற சமூகத்திடம் நாம் சோரம் போனமைக்கு மூலகாரணமே இக்கட்சிதான். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கேட்டது போன்று இக்கட்சியை அழித்துவிடுவாயாக!