Header Ads



ஜெனிவாவில் மார்ச் 22 இல், இலங்கை அறிக்கையை வெளியிடும் ஹுசேன்

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 24ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

மார்ச் மாதம் 22ம் திகதி இலங்கை குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் பேரவையில் வெளியிடவுள்ளார்.

இலங்கை தொடர்பாக கடந்த வருடம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பான எழுத்துமூல அறிக்கையையே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார்.

கடந்த வருடம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற 30வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அந்தப் பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது.

அதன்படி இலங்கையானது குறித்த பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 32வது கூட்டத் தொடரில் வாய்மூல அறிக்கையை செய்ட் அல் ஹுசேன் வெளியிட்டிருந்தார்.

அதற்கு இடையில் இவ்வருடம் பெப்ரவரி மாதம் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தையும் மேற்கொண்டிருந்ததுடன் பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 34வது கூட்டத் தொடரில் அல் ஹுசேன் முன்வைக்கவுள்ள அறிக்கைக்கு அரசாங்கம் பதிலளிக்கவுள்ளதுடன் அரசாங்கமும் ஒரு அறிக்கையை முன்வைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comment:

  1. He should be informed about the INACTION of the past and even current government toward certain RACIST monks groups, even after the crimes are well proven by media, and other means.

    HOPE the UN man take this into account.

    ReplyDelete

Powered by Blogger.