Header Ads



2017 ஆம் ஆண்டு, புதிய புரட்சிகள் ஏற்படும் - டிலான்

2017 ஆண்டு கலப்பு மேகங்கள் சூழ்ந்த வருடமாக இருக்கும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த ஜனவரி மாதத்துடன் தேசிய அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியாக உள்ளது. இந்த இணக்க அரசாங்கத்தின் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதா இல்லையா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும்.

2017 ஆம் ஆண்டு புதிய புரட்சிகள் ஏற்படும் ஆண்டு. புதிய அரசியலமைப்புத் திருத்தம், தேர்தல் மற்றும் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு நடக்கும்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர பிரச்சினை தொடர்பான விடயம் இந்தளவுக்கு வந்ததும் வெற்றியானது.

அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைக்கு அமைய பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அவர் தற்போது நாட்டில் இல்லை. நாடு திரும்பிய பின்னர், அவர் இது குறித்து மீண்டும் பேச ஆரம்பிப்பார்.

ஜனாதிபதியின் தலையீட்டின் கீழ் அடுத்த வருடம் தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பசில் ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தேர்தலை குழப்ப நடவடிக்கை எடுத்திருந்தாலும் வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன போன்றவர்கள் தேர்தலை துரிதமாக நடத்த நடவடிக்கை எடுத்தனர் என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.