ஈரானுக்கு உளவுபார்த்த 15 பேருக்கு மரண தண்டனை
ஈரானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சவூதி அரேபிய நீதிமன்றம் ஒன்று 15 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
ரியாத் நீதிமன்றம் ஒன்றே நேற்று இந்த தண்டனையை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் 30 சவூதி நாட்டு ஷியா பிரிவினர், ஒரு ஈரானியர் மற்றும் ஒரு ஆப்கானியர் உட்பட 32 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஈரானிய உளவுப் பிரிவுடன் இணைந்து சவூதி இராணுவத்தின் மிக ரகசியமான தகவல்களை ஈரானுக்கு வழங்கியதாகவே கடந்த பெப்ரவரி மாதத்தில் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சவூதி பொருளாதாரத்தை சீர்குலைத்தது, மதப்பிளவுகளை தூண்டியது, அரச எதிர்ப்பு அர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஷியா ஆதிக்க நாடான ஈரான் சுன்னி ஆதிக்க நாடான சவூதி அரேபியாவுக்கு இடையிலான இராஜதந்திர பதற்றம் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment