இஸ்ரேலுக்கு படுதோல்வி, 12 நாடுகளுடன் உறவு மட்டுப்படுத்தப்படுகிறது
ஐ.நா பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த 12 நாடுகளுடனான உறவுகளை தற்காலிகமாக மட்டுப்படுத்திக் கொள்ளும்படி இஸ்ரேலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வெளியுறவு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானமே கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் 14 – 0 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆதரவாக வாக்களித்த மேலும் இரண்டு நாடுகளான மலேஷியா மற்றும் வெனிசுவேலாவுடன் இஸ்ரேலுக்கு ஏற்கனவே எந்தவொரு இராஜதந்திர உறவும் இல்லை.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜப்பான், உக்ரைன், அங்கோலா, எகிப்து, உருகுவே, ஸ்பெயின், செனகல் மற்றும் நியூஸிலாந்து நாடுகளின் தூதரகங்களுடனான உறவுகள் மட்டுப்படுத்தப்படுவதாக இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை நெதன்யாகு சந்திப்பதில்லை என்றும் இந்த நாடுகளின் தூதுவர்களுக்கு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுப்பதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறித்த நாடுகளுக்கான இஸ்ரேலிய அமைச்சர்களின் பயணங்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
பாதுகாப்புச் சபையின் 2334ஆவது தீர்மானத்தில் மேற்குக் கரையில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்ட அடிப்படை இல்லை என்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதோடு இரு நாட்டு தீர்வுத் திட்டத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இஸ்ரேல் 10 நாடுகளின் தூதுவர்களை அழைத்து கண்டனத்தை வெளியிட்டது. குறிப்பாக வழமைக்கு மாறாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவருக்கு நெதன்யாகு அழைப்பாணை விடுத்திருந்தார்.
இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா பாதுகாப்பு சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு பின்னணியில் இருந்ததாக நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். எனினும் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்படும் இதுபோன்ற தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்யும். ஆனால் இந்த முறை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. இது இரு நாட்டு உறவுகளிலும் பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் குடியேற்றங்களை அமெரிக்கா கடந்த காலங்களில் கண்டித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை மீறி கிழக்கு ஜெரூசலம் பகுதியில் புதிதாக 5,600 வீடுகளை கட்ட இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. ஐ.நா தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினையில் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் யூதக் குடியேற்றங்கள் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக உள்ளது. 1967 இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குப் பின் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் சுமார் 140 குடியேற்றங்களில் 500,000க்கும் அதிகமான யூதர்கள் வாழ்கின்றனர். பலஸ்தீனம் நம்பும் தனது எதிர்கால தேசத்தின் நிலங்களாக இது உள்ளது.
சர்வதேச சட்டத்தின்படி இந்த குடியேற்றங்கள் சட்டவிரோதம் என்று கூறப்பட்டபோதும் இஸ்ரேல் அதனை மீறி செயற்பட்டு வருகிறது..
யாஅல்லாஹ்
ReplyDeleteகஷ்டத்திலும் உன்னை நம்பியிருக்கும் மக்களை பாதுகாப்பாயாக.
Now we will see on 2017 start world war3 Un and same community members!so they are planning to start war!!!
ReplyDeleteGood நெதன்யாகு ... இதை தான் இன்னும் எதிர்பார்க்கிறோம் உனக்கு நீயே தடைபோட்டுக்கோ
ReplyDeleteGood நெதன்யாகு ... இதை தான் இன்னும் எதிர்பார்க்கிறோம் உனக்கு நீயே தடைபோட்டுக்கோ
ReplyDeleteAllah is the greatest plotter.
ReplyDeleteஅல்லாஹ் சோன்னது உன்மைதான், ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் ஒளியும் காலம் வரும் .இன்ஷாஅல்லாஹ்...
ReplyDelete