Header Ads



வடகிழக்கில் 10.000 வீடுகள் - ஜனவரி 15 இற்கு முன் விண்ணப்பியுங்கள்

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டதிற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பாக அமைச்சர் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கில் முதற்கட்டமாக அமைக்கபடவுள்ள பத்தாயிரம் வீட்டத்திட்டற்கு போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் விண்ணப்பிக்க முடியும். கடந்த காலத்தில் எமது அமைச்சினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே விண்ணபித்திருந்தாலும் கூட இத்திட்டத்திற்கு மீண்டும் அம்மக்களும் விண்ணபிக்காதவர்களும் விண்ணப்பங்களை செய்ய முடியும்.

இத்திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற விரும்பும் பயனாளிகள் ஆறு இலட்சம் ரூபா கொடுப்பனவு செய்ய வேண்டும் என சில தரப்பினர் தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர். இக்கருத்தும் தவறானதாகும்.

 இவ்வீடுகளுக்கு விண்ணப்பிப்தற்கான விளம்பரம் பல பத்திரிகைளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவ்வீடுகளை பெற விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகங்களில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும்.

மக்களை தவறாக வழிநடத்துவதற்கு எவரும் முயலக்கூடாது என்பதோடு ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.