அல்ஹிலால் அதிபராக MMM இர்ஷாட்
நீர்கொழும்பு - பெரியமுல்லை அல்ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபராக எம்.எம்.எம். இர்ஷாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த இவர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக அண்மையில் ஏற்றுக்கொண்டார்.
பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள இவர், நீர்கொழும்பு கல்வி வலய ஆசிரியர் ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார்.
போருத்தோட்ட அல் பலாஹ் மற்றும் பெரியமுல்லை அல் ஹிலால் பாடசாலைகளின் பழைய மாணவரான இவர், பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.
பலகத்துறை - போருத்தோட்டயை பிறப்பிடமாக கொண்ட இர்ஷாட், மர்ஹும்களான மஸுட் ரூபில் மற்றும் ரஹ்மத் ரஸீனாவின் மகனாவார்.
Post a Comment